பக்கம் எண் :

39

41. குறுகான் சிறியாரைக் கொள்ளான் புலால்பொய்
மறுகான் பிறர்பொருள் வௌவான் - இறுகானாய்
ஈடற் றவர்க்கீவா னாயி னெறிநூல்கள்
பாடிறப்ப பன்னு மிடத்து.

(இ-ள்.) சிறியாரைக் குறுகான் - கீழ்மக்களை நெருங்காமலும், புலால் கொள்ளான் - ஊனுண்ணாமலும், பொய் மறுகான் - பொய்யுரையைக் கொண்டொழுகாமலும், பிறர் பொருள் வௌவான் - பிறர் பொருளைக் கவர விரும்பாமலும், இறுகானாய் - செல்வப்பொருளை இறுக்கிப் பிடியாமலும், ஈடு அற்றவர்க்கு - மாட்டாதவர்க்கு, ஈவான் ஆயின் - கொடுப்பானானால், பன்னுமிடத்து - சொல்லுங்கால், நெறி நூல்கள் - அறிவு நூல்கள், பாடு இறப்ப - அவனுக்குப் பயன்படுதலில்லாதனவாம்.

(ப-பொ-ரை.) சிற்றினத்தைக் குறுகாது, புலாலை விரும்பாது, பொய்யுரையைக் கொண்டொழுகாது, பிறர் பொருளை விரும்பாது, பற்றுள்ளத்தா லிறுகாது தளர்ந்தார்க் கொன்றீவனாயி னறஞ் சொல்லு நூல்கள் சொல்லுமிடத்துப் பயனற்றன.

(க-து.) கீழ்மக்களை இணங்காமை முதலியன உடையானுக்கு அறிவு நூல்கள் வேண்டா.

மறுகல், மயங்கல். ஈடு அற்றவரென்பதைத் திரும்ப ஈடு செய்தல் அற்றவரென்றுரைப்பினுமாம். நெறி நூல்கள் என்றார், அவை அறவழியை; யுணர்கின்றமையினென்பது. இறப்ப : பலவின் படர்க்கை வினைமுற்று; இறத்தல் - அப்புறப்படுத்தல்.

(41)

42. கொல்லா னுடன்படான் கொல்வா ரினஞ்சேரான்
புல்லான் பிறர்பாற் புலான்மயங்கல் - செல்லான்
குடிப்படுத்துக் கூழீந்தான் கொல்யானை யேறி
அடிப்படுப்பான் மண்ணாண் டரசு.

(இ-ள்.) கொல்லான் - ஓருயிரைக் கொல்லாமலும், உடன்படான் - பிறர் கொல்வதற்குஉடன்படாமலும், கொல்வார் இனம் - கொலைத் தொழில் பயில்வார் கூட்டத்தை, சேரான் -