பக்கம் எண் :

41

(ப-பொ-ரை.) சூதினைக் காதலியாது, ஒன்றினான் மறைந்து வஞ்சியாது, பயனில்லாவற்றைப் பரக்கவுரையாது, ஒருவர் திறத்து மாறுபட்டுரைத்தலைக் காதலியாது, மாதரார் சொல்லு மின் சொல்லைத் தேறாது, காது தாழச்செய்யா நின்ற வாபரணங்களார் குழையாய்! மாதவர்க் கூணீந்தவன்றான் மகரத் தொழிலையுடைய வாயின் மாடத்து வாழ்வான்.

(க-து.) கவறாடாமை முதலியன உடையான் பெரிய மாளிகையிலிருக்கும் வாழ்வு பெறுவான்.

சுலாவல் - சுழலல்; மனங்கலங்குதல்; ஈண்டு இது தொழிலாகு பெயரென்க. காதுதாழ் - காது தாழ்கின்ற எனின் எழுவாய்த் தொடராம். குண்டலங்களில் ஒருவகை மகரமீன் வடிவாய்ச் செய்யப்படுதலின் அது மகர குண்டலம் எனப்பட்டதென்க. மகரம் - சுறாமீன். மாதரார் - மாது - விருப்பம்; காரிய வாகு பெயராய்ப்பெண்களை யுணர்த்தியது.

(43)

44. பொய்யான்பொய் மேவான் புலாலுண்ணான் யாவரையும்
வையான் வழிசீத்து வாலடிசில் - நையாதே
ஈத்துண்பா னாகு மிருங்கடல்சூழ் மண்ணரசாய்ப்
பாத்துண்பா னேத்துண்பான் பாடு.

(இ-ள்.) பொய்யான் - பொய் சொல்லாமலும், பொய் மேவான் - பிறர் பேசும் பொய்க்கு உடன்படாமலும், புலால் உண்ணான் - ஊனுண்ணாமலும், யாவரையும் வையான் - எவரையும் இகழாமல், நையாது - விருந்தினர் முதலியோர் வருந்தாமல், வழிசீத்து - வழி திருத்தி, வால் அடிசில் - தூய்மையான உணவை, ஈத்து உண்பான் - பகுத்துக்கொடுத்துண்பவன், இரு கடல்சூழ் - பெரிய கடல்சூழ்ந்த, மண் அரசு ஆய் - உலகத்துக்கு அரசனாகி, பாத்து உண்பான் - ஐவகைப் புலன்களை நுகர்வானும், பாடு ஏத்து உண்பான் - பெருமையும் புகழும் அடைவானும் ஆகும் - ஆவான்.

(ப-பொ-ரை.) தான் பொய்யுரையாது, பிறர் சொல்லும் பொய்க் குடன்படாது, புலாலுண்ணாது, யாவரையும் வையாது, பலர் போம் வழிகளையுந் திருத்தி, நல்ல வடிசிலை யொழியாதே யீத்துண்பானாகு மிருங்கடல்சூழ் மண்ணரசாய்ப் பகுத்துண்பான் பிறராற் றன் பெருமை யேத் துண்பானும்.