பக்கம் எண் :

43

46. களியான்கள் ளுண்ணான் களிப்பாரைக் காணான்
ஒளியான் விருந்திற் குலையான் - எளியாரை
எள்ளானீத் துண்பானே லேதமின் மண்ணாண்டு
கொள்வான் குடிவாழ்வான் கூர்ந்து.

(இ-ள்.) களியான் - செருக்காமலும், கள் உண்ணான் - கள்ளுண்ணாமலும், களிப்பாரை - கள்ளுண்பவரை, காணான் - அடுக்காமலும், விருந்திற்கு - விருந்தினனுக்கு, ஒளியான் - பொருள்களை மறையாமலும், உலையான் - ஒழுக்கத்தில் நழுவாமலும், எளியாரை எள்ளான் - வறியவரை இகழாமலும், ஈந்து உண்பானேல் - பிறர்க்கு அளித்துத் தானும் உண்பானானால், ஏதம் இல் மண் கொண்டு - குற்றமில்லாத நாட்டைப் பெற்று, ஆள்வான் - ஆட்சி செய்வான், குடிகூர்ந்து வாழ்வான் - குடும்பம் பெருகியும் வாழ்வான்.

(ப-பொ-ரை.) கள்ளையுண்டு களியாமலும், கள்ளையுண்ணாமலும், களிப்பாரைக் காணாமலும், வந்த விருந்தினரை ஓம்புதற்குப் பயந்து ஒளியாமலும், விருந்தினரை ஓம்பி மன நோகாமலும், ஏற்றோர்க்குக் கொடுத்துத் தானும் உண்பானாயின்; தானே மண் அனைத்தும் ஆண்டுகொள்வதுமன்றித் தன் இல்லற வாழ்க்கையினும் ஓங்கி வாழ்வான்.

(க-து.) செருக்காமை முதலியன உடையான், குடிபெருகி நாடாள்வான்.

நாட்டுக்கு ஏதமின்மையாவது நல்ல விளையுளும் நற்குடிகளுமுடைமையாகும், மண்ணாண்டு கொள்வானென்பதை ‘மண் கொண்டு ஆள்வா' னென்று மாற்றிக்கொள்க. கூர்ந்துமென எச்சவும்மை விரித்துரைக்க. விருந்து - விருந்தினன் : பண்பாகுபெயர்.

(46)

47. பெரியோர்சொற் பேணிப் பிறழாது நின்று
பரியா வடியார்ப் பறியான் - கரியார்சொல்
தேறா னியையான் தெளிந்தடிசி லீத்துண்பான்
மாறான்மண் ணாளுமா மற்று.

(இ-ள்.) பெரியோர் சொல் பேணி - சான்றோரறிவுரைகளைப் போற்றி, பிறழாது நின்று - அவற்றின்படி தவறாம