பக்கம் எண் :

44

லொழுகி, அடியார் பரியா - பணி செய்வார்மேல் விருப்பங் காட்டாமலும், பறியான் - வெறுத்து நீக்காமலும், கரியார் சொல் - வஞ்சர் சொற்களை, தேறான் - நம்பாமலும், இயையான் - அவரோடு நட்புக்கொள்ளாமலும், தெளிந்து - வாழ்க்கையின் பயனை ஆராய்ந்துணர்ந்து, அடிசில் ஈந்து உண்பான் - விருந்தினர் முதலியவர்க்குப் படைத்துத் தானும் உண்பவன், மாறான் மண் ஆளும் - தவறாமல் நாடாள்வான்.

(ப-பொ-ரை.) ஒழுக்கத்திற் பெரியோரது உறுதிமொழியைப் போற்றி, அவ்வொழுக்குக்குத் தக வழுவாது நிலைத்து, அன்பு நிறைந்த அடியவரை விட்டு நீங்காது, மருள் நீங்காரது சொல்லைக் கொள்ளாது, அவரோடு பொருந்தாது, வேள்வியின் பயனறிந்து பகுத்துண்பவன், நீங்காதவனாய்ப் பூமி முழுதும் ஆளும் அரசன் ஆவான்.

(க-து.) பெரியார் சொற்பேணல் முதலியன உடையவன் கட்டாயம் மண்ணாள்வான்.

பரியா : மல்லீறு தொக்க வினையெச்சம். கரியார், உள்ளத்திற் கருமை யுடையவர்; ஆவது, கரவுடையாரென்க. ஆமும் மற்றும் அசைகள். "மாறாமை மண்ணாலு மற்று" என்றும் பாடம்.

(47)

48. வேற்றரவஞ் சேரான் விருந்தொழியான் தன்னில்லுள்
சோற்றரவஞ் சொல்லியுண் பானாயின் - மாற்றரவங்
கேளான் கிளையோம்பிற் கேடி லரசனாய்
வாளான்மண் ணாண்டு வரும்.

(இ-ள்.) வேறு அரவம் சேரான் - தீச்சொற்களைப் பேசாமலும், விருந்து ஒளியான் - விருந்தினர்க்குப் பொருளை மறையாமலும், தன் இல்லுள் - தன் வீட்டில், சோறு அரவம் சொல்லி - உணவிடுதற்குரிய இன்சொற்களைப் பசித்தவர்களுக்குச் சொல்லி யழைத்து, உண்பான் ஆயின் - அவர்களுக்கிட்டுத்தானும் உண்பானாயினும், மாறு அரவம் கேளான் - பகைவர் சொற்களைக் கேளாமல், கிளை ஓம்பின் - தனக் குறவினரைப் பாதுகாப்பானாயினும், கேடு இல் அரசனாய் - அழிதலில்லாத (நிலையான) அரசனாய், வாளால் - வாள் வலத்தோடு, மண் ஆண்டு வரும் - நாட்டை அரசாண்டு வருவான்.