பக்கம் எண் :

45

(ப-பொ-ரை.) பழிதருஞ் செயலை விரும்பானாகி, வந்த விருந்தினர்க் கஞ்சி ஒளியாமல் தன் இல்லத்தில் பிறர் வந்துண்ணும்படியாகத் தான் உண்ணுஞ் செய்தியை யறிவித்துப் பின் ஒருவன் உண்பானாயின், பகையரசர் சொல்லுங் கேட்க வேண்டானாய்த் தன் குடும்பத்தைப் பேணி அழிவில்லாத அரசுரிமையுடையவனாய் வாளால் வெல்லும் பூமியினை ஆண்டுகொண்டிருப்பான்.

(க-து.) தீய சொற்களைப் பேசாமை முதலியன உடையவன் என்றும் நாடாள்பவனாவான்.

அரவம் - ஒலி; ஈண்டுப் பேச்சொலிகளை யுணர்த்துதலின், அதற்குச் சொற்களென்று பொருளுரைக்கப்பட்டது. விருந்திடும்போது உரையாடும் உரையைச் ‘சோற்றரவம்' என்றார். ‘சொல்லி' யென்றது அழைத்தலின் குறிப்பினது. அரசனாவானென்றது, மறுமையி லென்க. பிறாண்டும் இங்ஙனம் வருவனவற்றிற்கெல்லாம் இதுவே கருத்தாகக் கொள்க. மாறு : பண்பாகு பெயர்.

(48)

49. யானை குதிரைபொன் கன்னியே யானிரையோ
டேனை யொழிந்த விவையெல்லாம் - ஆனெய்யால்
எண்ணனாய் மாதவர்க் கூணீந்தான் வைசிர
வண்ணனாய் வாழ்வான் வகுத்து.

(இ-ள்.) எண்ணன் ஆய் - அறிவாராய்ச்சி யுடையானாய், யானை (தவஞ்செய்வா ரல்லாதார்க்கு) யானையும், குதிரை - குதிரையும், பொன் - பொன்னும், கன்னி - கன்னிகையும், ஆன் நிரையோடு - ஆன் கூட்டமும், ஏனை ஒழிந்த - மற்றை ஈகைப் பொருள்களும், இவை யெல்லாம் - ஆகிய இப்பொருள்களெல்லாவற்றையும், மாதவர்க்கு - பெருந்தவத்தினர்க்கு, ஆன் நெய்யால் - ஆவின் நெய்யோடு, ஊண் ஈந்தான் - உணவளித்தவன், வைசிர வண்ணன் ஆய் - குபேரனாய், வகுத்து வாழ்வான் - தனியாய் மதிக்கப்பட்டு வாழ்வான்.

(ப-பொ-ரை.) யானையும் குதிரையும் பொன்னும் கன்னிகையும் பசுவின் கூட்டமும், மற்றப் பொருள்களும் வேண்டியஅவரவர்க்கு வகையறிந்து ஈந்தவனும், மாதவர்க்குப் பசுவினெய்யுடன் உணவளித்து அன்பு செய்தவனும் ஆகிய ஒருவன், குபேரப் பட்டம் பெற்று வாழ்வான்.

(க-து.) தவத்தோர்க்கு ஆவின் நெய் பெய்த உணவும், ஏனையோர்க்கு யானை, குதிரை முதலானவைகளும் வழங்கு