பக்கம் எண் :

46

கின்றவன், குபேரனைப்போற் பெருஞ் செல்வமுந் தனிமதிப்பும் உடையனாவான்.

எண்ணேகாரத்தைப் பிறவற்றிற்கு மொட்டுக. மாதவர்க்கு யானையுங் குதிரையும் முதலாயின வேண்டாமையின், அவை ஏனையோர்க்கென் றுரைக்கப்பட்டன. ஒழிந்த : பலவின் படர்க்கை வினையாலணையும் பெயர். ஒழிந்தவை யாவன, நிலமும் ஆடையும் முதலாயின வென்க. நெய்யால் : உருபு மயக்கம். எத்தனையுங் கருதி யறிந்து வழங்கல் வேண்டுமென்றற்கு வழங்குவானை ‘எண்ணன் ஆய்' என்று விதந்துரைத்தார். வைசிர வண்ணன், குபேரன்; விசிரவசுவின் புதல்வனாகலின் அவன் அப்பெயர் பெற்றான். வகுத்தென்பதற்குச் செயப்பாட்டு வினைப்பொருள் கொள்க.

(49)

50. எள்ளே பருத்தியே யெண்ணெ யுடுத்தாடை
வள்ளே துணியே யிவற்றோடு - கொள்ளென
அன்புற் றசனங் கொடுத்தான் றுணையினோ
டின்புற்று வாழ்வா னியைந்து.

(இ-ள்.) எள்ளே - எள்ளும், பருத்தியே - பஞ்சினாலாகிய அரை ஞாணும், எண்ணெய் - எண்ணெயும், உடுத்து ஆடை - உடுத்தும் ஆடையும், வள்ளே - பணமும், துணியே - போர்வையும், இவற்றோடு - ஆகிய இவற்றுடன், அசனம் - உணவும், கொள் என்ன - ஏற்றுக்கொள்வீர்களாக வென்று சொல்லி, அன்புற்று கொடுத்தான் - அன்புகூர்ந்து கொடுத்தவன், துணையினோடு இயைந்து - தன் மனைவி முதலிய சுற்றத்தாரோடு கலந்து, இன்புற்று வாழ்வான் - இன்பம் பொருந்தி வாழ்வான்.

(ப-பொ-ரை.) அன்புடன் உணவினையும் எள்ளினாகிய எண்ணெயையும் பருத்தியினாகிய உடுக்கையையும் கொடுத்து, கணக்கு நூலையும் இலக்கண நூலையும் பயன்படும் நுட்பத்தோடும் தெளிந்த அறிவோடும் கொள்வோர்க்கு உளமார உதவியவன் தன் மனைவியுட னின்புற்று அளாவி வாழ்வான்.

(க-து.) மாதவர்க்கு எள் முதலியவற்றை அன்புடன் ஈவான், தன் மனைவி மக்களோடு இன்பமாய் வாழ்வான்.

பருத்தி - நூல் : கருவியாகு பெயர். துணி - துணிக்கப்பட்டது. எள் இனிப்புச் சேர்த்த எள்ளெனவும், எண்ணெய் தேய்த்துக் கொள்வார்க்கு முன்பு வெல்லங்கலந்த எள்ளைக் கொடுத்துப் பின்பு எண்ணெய் கொடுத்தல் வேண்டுமென்பது