பக்கம் எண் :

51

வருந்துகின்றவர்க்கும், ஆனார் என்று - அவர்களைக் காப்பாற்றுதற்கு அமைந்தவர்களென்று பிறர் சொல்லும்படி, ஊண் ஈய்த்து - உணவு கொடுத்து, உறுநோய் களைந்தார் - அவர்களுக்கு உண்டான நோய்களை நீக்கியவர்கள், பெருஞ்செல்வம் ஈய்த்து - மிக்க பொருளை வறியார்க்குக்கொடுத்து, கலந்து வாழ்வார் - தம் உறவினர்களுடன் கூடி மகிழ்ச்சியாய் வாழ்வார்கள்.

(ப-பொ-ரை.) ஈன்றவர், ஈனுங்காலத்து நோயாற் றளர்வார், சூலையுடையார், பிள்ளைகள், பித்தேறினார், வாத நோயா லறிவு கெட்டார், ஓம்புதற் கமைந்தாரென் றூணுதவியுறுநோயைக் களைந்தார், பிறர்க்குத் தனங்களை யீந்து பெருஞ் செல்வங்களை நுகர்ந்து வாழ்வார்.

(க-து.) ஈன்றார் முதலானவர்களுக்கு உணவு கொடுத்தல், நோய் நீக்குதல் முதலான அறச்செயல்களைச் செய்தல் வேண்டும்.

ஈன்கால் : வினைத்தொகை; மான்றார், மால்; பகுதி. வளி, வாதமென்னும் பொருட்டாதலை, "வளிமுதலா வெண்ணிய மூன்று" என்னுந் திருக்குறளுக்கு ஆசிரியர் பரிமேலழகருரைத்த உரையா னறிக. வளி : காரண வாகுபெயர். ஆனார், ஆனவர்; ஆவது - துணையானவ ரென்க. என் றென்னுஞ் செய்தெனெச்சத்தைச்செயவெனெச்சமாய்த் திரித்துக்கொள்க. ஈய்த்தென்பதில், யகரமெய் விரித்தல் விகாரம்.

(55)

56. தளையாளர் தாப்பாளர் தாழ்ந்தவர் பெண்டீ
ருளையாள ரூணொன்று மில்லார் - கிளைஞராய்
மாவலந்த நோக்கினா யூணீய்ந்தார் மாக்கடல்சூழ்
நாவலந்தீ வாள்வாரே நன்கு.

(இ-ள்.) மா அலந்த - மான்கள் மயங்குதற்குஏதுவாகிய, நோக்கினாய் - பார்வையையுடைய பெண்ணே!, தளையாளர் - தாம் செய்த குற்றத்திற்காகக் காலில் தளையிடப்பட்டவர்கள், தாப்பாளர் - ஒறுக்கப்பட்டு நைகின்றவர்கள், தாழ்ந்தவர் - மேல்நிலையிலிருந்து முன்வினையினால் தாழ்வடைந்தவர்கள், பெண்டீர் - பெண்மக்கள், உளையாளர் - இல்லாமை, நோய் முதலியவற்றால் வருந்துதலை யுடையவர்கள்,ஊண் ஒன்றும் இல்லார் - சாப்பாடு சிறிதும் இல்லாதவர்கள் என்பார்க்கு, கிளைஞராய் - உறவினர்போலாகி, ஈய்ந்தார் - உணவு கொடுத்