தவர்கள், மா கடல் சூழ் - பெரிய கடல் சூழ்ந்த, நாவலந் தீவு - இவ்விந்திய நாடு முழுமையும், நன்கு ஆள்வார் - நன்றாய் அரசாட்சி செய்வார்கள். (ப-பொ-ரை.) தளையீடுண்டார், தாப்பாளர், புலையர், பெண்டுகள், பிணியாலுழன்றார், வறியர் என்றிப் பெற்றிப்பட்டார்க்குக் கிளைஞரா யூணீய்ந்தார், மானைப் பிணித்த நோக்கையுடையாய்! பெரிய கடல் சூழ்ந்த மண்ணையாள்வார். (க-து.) தளையாளர் முதலியவர்களுக்கு உணவு கொடுத்தல் அறமாம். மாவலந்த என்பதை மானை வருத்துகின்ற எனலும், மாவடுவின் பிளவை வென்ற எனலுமாம். தாப்பு : புவ்விகுதித் தொழிற்பெயர்; தாப்பாளர் தாக்கலுடையவர்கள்; ஆவது அடித்தும் உதைத்தும் ஒறுக்கப்பட்டவர்களென்பது, தாம்பு + ஆளர் என்று பிரித்துக் கயிற்றால் கட்டுண்டவர் என்க. பெண் மக்கள் பார்வையைக் கண்டு அவர்களைத் தம்மினம் போலுமென மான்கள் மயங்கினவென்றற்கு, ‘ மாவலந்த நோக்கினா' யென்றார். உளை : முதனிலைத் தொழிற்பெயர். (56) 57. கருஞ்சிரங்கு வெண்டொழுநோய் கல்வளி காயும் பெருஞ்சிரங்கு பேர்வயிற்றுத் தீயார்க் - கருஞ்சிரம மாற்றியூ ணீத்தவை தீர்த்தா ரரசராய்ப் போற்றியூ ணுண்பார் புரந்து. (இ-ள்.) கரும் சிரங்கு நோய் - கொடிய சிரங்கு நோயும், வெள் தொழு நோய் - வெள்ளைக்குட்ட நோயும் கல் நோய் - கல்லடைப்பு நோயும், வளிநோய் - வாத நோயும், காயும் - வருத்துகின்ற, பெரும் சிரங்குநோய் - கழலை நோயும், பேர்வயிற்றுத் தீ நோயார்க்கு - பெரிய வயிற்றெரிச்சல் நோயுமாகிய இவற்றையுடையார்க்கு. அரும் சிரமம் - அவர்களது பொறுத்தற்கரிய துன்பத்தை, ஆற்றி - தணித்து, ஊண் ஈந்து - அவர்களுக்கு உணவைக் கொடுத்து, அவை தீர்த்தார் - அந்நோய்களை நீக்கியவர்கள் அரசராய் போற்றி - மன்னவராய் யாவராலும் போற்றப்பட்டு, புரந்து உண்பார் - உலகாண்டு வாழ்வார். (ப-பொ-ரை.) கருஞ்சிரங்கும், வெள்ளிய தொழுநோயும், கல்லெரிப்பும், வாதமும், காய்ந்திடர் செய்யும் கழலை
|