பக்கம் எண் :

56

(ப-பொ-ரை.) சுற்றத்தார்மே லன்பும், செற்றமும், கோபமும் சொல்லுங்காற் பாங்கோடுதலும், உள்ளத்தாற் செய்யப்படு முலோபமும், சீர் நிரம்பாத மானமு மென்று சொல்லப்பட்ட ஆறு திறமு மாயத்தையுடைய வுயிர்கட்குக் குற்றமென்று சொல்லும் குற்றந்தீர்ந்தார் சொல்லிய நூல்கள்.

(க-து.) அவா முதலியன தீது தருமென்று அறிவு நூல்கள் கூறும்.

ஏகாரம், எண். ஓர்வம், ஓரம், ஒருபாற்சார்தல், பாங்கோடுதல், உலோபம் - ஈயாத்தன்மை; என்றுமே, ஊனமே யென்பவற்றில் ஏகாரம் அசை. உயிர் - மாந்தர்.

(61)

62. கூத்தும் விழவு மணமுங் கொலைக்களமு
மார்த்த முனையுள்ளும் வேறிடத்தும் - ஓத்தும்
ஒழுக்கு முடையவர் செல்லாரே செல்லின்
இழுக்கு மிழவுந் தரும்.

(இ-ள்.) ஓத்தும் ஒழுக்கும் உடையவர் - கல்வியும் அதற்குத்தக்க ஒழுக்கமும் உடைய சான்றோர்கள், கூத்தும் - கூத்தாடு மிடத்திலும், விழவு - திருவிழா நடக்குமிடத்திலும், மணம் - திருமணம் நிகழுமிடத்திலும், கொலைக்களமும் - கொலை பயிலு மிடத்திலும், ஆர்த்த முனையுள்ளும் - ஆரவாரிக்கும் போர்க்களத்திலும், வேறு இடத்தும் - இவற்றைப் போன்ற வேறிடங்களிலும், செல்லார் - போகார், செல்லின் - அங்ஙனம் போவார்களாயின், இழுக்கும் இழவும் தரும் - அவர்களுக்குத் தாழ்வையும் பொருளழிவையுங் கொடுக்கும்.

(ப-பொ-ரை.) கூத்தாடு மிடத்தும், விழாச் செய்யுமிடத்தும், மணஞ் செய்யுமிடத்தும், ஆர்த்த போர்க்களத்தும், பகைவரிடத்தும், இதுபோலும் வேறிடத்தும் ஒழுக்க முடையவர் செல்லார். செல்வராயின் உயிர்க்கிடையூறும் பொருளிழவுந் தரும்.

(க-து.) கூத்தாடுமிடம் முதலியவற்றிற்குச் செல்லுதல் கீழ்மைத் தன்மையையும் பொருளழிவையும் உண்டாகும்.

முனையுள்ளும் என்பதிலுள்ள உள் ஏழனுருபு; இதனை இதன் முன்னுள்ள மற்றைய நான்கனோடுங் கூட்டுக. ஓத்து, ஓது என்னும் முதனிலையின் றிரிபு. இது தொழிலாகுபெயராய் ஈண்டுக் கல்வியை யுணர்த்திற்று. கூத்து முதலாயினவற்றிற்கும்