பக்கம் எண் :

65

(இ-ள்.) உணராமையால் குற்றம் ஆம் - அறியாமையால் குற்றங்களுண்டாகும்; ஒத்தான் வினையாம் - நூலுணர்ச்சியால் நல்வினைகள் விளையும், உணரான் வினை - அறிவு நூல்களையுணராதவன் செயல்கள். பிறப்புச் செய்யும் - பிறப்பை யுண்டாக்கும், பிறப்பினால் உணராத - பிறப்பால் அறியப்படாத, தொண்டு இரும் துன்பம் - ஒன்பது பெரிய துன்பங்கள், தொடரும் - தொடர்ந்து வரும், மண்டிலமும் ஆகும் - அதனால் அடிக்கடி அப்பிறவிச் சூழலிற் சுழலலுமாகும், மதி - ஆகவே நீ அதனை நன்கு கருத்திருத்துக.

(ப-பொ-ரை.) பேதைமையாற் காமம் வெகுளி மயக்கமாகிய முக்குற்றமுளவாம். கல்வியாற் சீலமுளவாம், அறிவிலாதான் செய்யும் வினைகள் பிறப்பினையாக்கும். பிறப்பினானுணராத தொண்டான் வரும் பெருந்துன்பந் தொடர்ந்து வரும், பின்னையும் பிறப்பாலே பஞ்ச பரிவத்தானமா மென்றவாறு. இதனுட் டுன்பமென்ப தொன்பது. அவ்வொன்பதாவன : உயிரும் உயிரில்லாதனவும், புண்ணியமும் பாவமுமுற்றுஞ் செறிப்புங் கட்டு முதிர்ப்பும் வீடுமென விவை.

(க-து.) அறியாமையாற் குற்றமும், நூலுணர்ச்சியால் நல்வினையும், அஃதின்மையாற் பிறப்பும், அப்பிறப்பால் துன்பமும், அதனான் மேன்மேலும் பிறவிச் சுழற்சியும் விளையுமென்பது. எனவே அறிவு நூல்களைப் பழுதறவோதி அறிவைப் பெருக்கிக் கொள்ளல் வேண்டுமென்பது கருத்து.

தொண்டு ஒன்பது ஒரு பத்தில் ஒன்று தோண்டித்தொளைக்கப்பட்ட தென்பது பொருள். ஒன்பது துன்பங்களாவன உயிரும் உயிரில்லாதனவும் புண்ணியமும் பாவமும் முற்றுஞ் செறிப்பும் கட்டும் முதிர்ப்பும் வீடு மென்பனவாமென்ப. மண்டிலம் - பரிவர்த்தனை, வட்டமாய் ஓடுதல்.

(72)

73. மனைவாழ்க்கை மாதவ மென்றிரண்டு மாண்ட
வினைவாழ்க்கை யாக விழைப - மனைவாழ்க்கை
பற்றுத லின்றி விடுதல்முற் சொல்லுமேல்
பற்றுதல் பாத்தி றவம்.

(இ-ள்.) மனை வாழ்க்கை - இல்லற வாழ்க்கையும், மாதவம் - சிறந்த தவவொழுக்கமும், என்று இரண்டும் - என்று கூறப்படும் இரண்டையும், மாண்ட வினை வாழ்க்கையாக - சிறந்த நல்வினைக்குரிய வாழ்க்கைகளாகவே கொண்டு, விழைப - அறிஞர்கள்