பக்கம் எண் :

68

76. ஒல்லுவ நல்ல வுருவவேற் கண்ணினாய்
வல்லுவ நாடி வகையினால் - சொல்லின்
கொடையினார் போகஞ் சுவர்க்கந் தவத்தால்
அடையாத் தவத்தினால் வீடு.

(இ-ள்.) ஒல்லுவ - ஒப்பனவும், நல்ல உருவ - அழகிய உருவினை யுடையனவுமான, வேல் கண்ணினாய் - வேல்போன்ற கண்களையுடைய பெண்ணே, சொல்லின் - சொல்லுமிடத்து, வல்லுவ நாடி - கற்றற்குக் கூடுமாயினவான அறிவுநூல்களையாராய்ந்து, வகையினால் - ஏற்ற வகையினாற் செய்யப்படும், கொடையினால் போகம் - ஈகையால் இம்மையின்பமும், தவத்தால் சுவர்க்கம் - பயன் கருதிய தவத்தினால் விண்ணுலகமும், அடையாத தவத்தினால் - பற்றடையாத தவவொழுக்கத்தினால், வீடு - வீடுபேறுமாம்.

(ப-பொ-ரை.) தம்மோ டொத்தவாய்த் திருத்தக்கவேல் போன்ற கண்ணையுடையாய்! வல்ல நூல்களை யாராய்ந்து திறம்படச் சொல்லுவேனாயிற் கொடையாற் போகமும் தவத்தினாற் றுறக்கமும், வேறுபடா தறிவோடு கூடிய மிக்க தவத்தினால் வீடும் பெறும்.

(க-து.) ஈகையால் இம்மை யின்பமும், தவத்தால் விண்ணுலக நுகர்ச்சியும், மெய்யுணர்வால் வீடுபேறு முண்டாமென்பது.

ஒல்லுதல் இணங்குதல்; எனவே ஒப்பாதலென் றுரைக்கப்பட்டது. ‘ஒல்லுவ வல்லுவ' வென்னு மிரண்டனுள், முன்னது தெரிநிலை வினையாலணையும் பெயரெனவும், பின்னது குறிப்பு வினையாலணையும் பெயரெனவும் உணர்க. அற்றாயின் ஒல்லுவவென்பதன் வகரவொற்று எதிர்கால முணர்த்தும் இடைநிலையெனவும், வல்லுவ வென்பதன் வகரவொற்று உடம்படு மெய்யெனவும் உரைக்க தவமிரண்டனுள்ளும் முன்னது பயன் கருதிய தவமெனவும் பின்னது மெய்யுணருந் தவமெனவும் அறியற்பாலன.

(76)

77. நாற்கதியுந் துன்ப நவைதீர்த்தல் வேண்டுவான்
பாற்கதியின் பாற்பட வாராய்ந்து - நூற்கதியின்
எல்லை யுயர்த்தார் தவமுயலின் மூன்றைந்தேழ்
வல்லைவீ டாகும் வகு.