டின்றிப் பொருள் காணும் இயல்பு வாய்ந்தது. வ. உ. சி. அவர்கள் இந்நூலிற்கு விருத்தியுரை வரைந்த அருமையும் பெருமையும் புலவரனைவரும் போற்றத் தகுந்த தொன்றாம் "உரை யெழுதி தி. செல்வக்கேசவராய முதலியார் அவர்களிடம் காட்டினேன் என்றும், அவ் வுரையைப் பார்த்துக் குற்றங்களைந்து குறைபெய்து தந்ததோடு வேறு சில பண்டிதர்களிடம் காட்டும்படி கட்டளையிட்டனர் என்றும், பின் த. கனகசுந்தரம் பிள்ளையவர்களிடம் காட்டினேன் என்றும், அவர்கள் முழுக் கவனத்தோடு பார்த்துப் பல சீர்திருத்தங்கள் செய்து தந்தனர் என்றும்" உரைப்பாயிரத்தில் வ. உ. சி அவர்கள் வரைந்திருப்பது உரை கண்ட பெரு முயற்சியையும் அதன் அருமை பெருமையையும் நன்கு விளக்கும். அவ்வுரையின்றெனில் ஒரு கவிக்கேனும் எளிதிற் பொருள் காண இயலாது என்பது திண்ணம். எத்துணையோ நாட்கள் முயன்று உரைகண்டிருப்பர் போலும். கடவுள் வாழ்த்துச் செய்யுள் ஒன்று மட்டும் நேரிசையகவல் ஆக நின்றது. இக்கவி இயற்றியவர் "பாரதம் பாடிய பெருந்தேவனார்" என வ. உ. சி அவர்கள் குறித்ததனால் அறிகின்றோம். "வேலற்றரீஇய விரிசடைப் பெம்மான், வாலிழைபாகத்தமரிய கொழுவேற், கூற்றங்கதழ்ந்தெறி கொன்றையன், கூட்டா வுலகங் கெழீய மலிந்தே" என்பது கடவுள் வாழ்த்துப்பா. இதற்கு இறுதியடியை மட்டும் "கூட்டா உலகம் மலிந்து கெழீஇய" என்று கொண்டு கூட்டிப் பொருளுரைக்கப்பட்டது முன்னுரை (வ. உ. சி. உரை) யில். பின்னுரையாகிய என்னுரையில் வேலற்றரீஇய....பெம்மான், கொழு வேற்கூற்றம்கதழ்ந்து எறி கொன்றையன், பாகத்து வாலிழை அமரிய கூட்டா உலகம் மலிந்து கெழீஇய என்று கொண்டு கூட்டப்பட்டது.
|