பக்கம் எண் :


11

"அமரிய" என்ற மொழியை "அமர்ந்த" என்று பெயரெச்சமாகப் பொருள் கூறினர் முன்னவர். "அமரிய" செய்யிய என்னும் வாய்பாட்டு வினையெச்சமாகக் கொண்டு அமர எனப் பொருள் கொள்ளப்பட்டது. பெம்மான் கொன்றையன் பாகத்து வாலிழையமர அதனால் துணையாக எல்லாவுலகங்களும் பெருகி விளங்கின எனச் சைவசித்தாந்தத்திற்குத்தக விளக்கி யிருப்பது காண்க. 7, 19, 24 எண்ணுள்ள கவிகள் ஐந்துசீர் வந்த அடியுடையனவாயிருந்தன திருவள்ளுவர்காலமுதல் ஐந்து சீரடிவந்த வெண்பா நூல்கள் ஒன்றும் இன்று என்பது புலவரனைவரும் கண்ட வுண்மையாம். ஆதலால் அவ்வடிகளை நாற்சீரடியாகக் கொண்டு பொருள் கூறல் நலம் பயக்கும் எனக் கருதிச் சிறு மாறுதல் செய்யப்பட்டது. 7 ஆம் கவியின் இரண்டாம் அடி "நாமீட் டொறுக் கொணா ஞாங்க ரடிப்பட்ட சீம்பால்" என்றிருந்தது. நாமீட் டொறுக்கொணா ஞாங்கரடித் தீம்பால் எனவும், 19 ஆம் கவியுள் மூன்றாம் அடி "யாம்வெறுக்கை யின்றி யமையாதா மஃதிலார் மையாவி" என்றிருந்தது, "யாம் வெறுக்கை யின்றி யமையாரா மையாவி" எனவும் 24 ஆம் கவியின் முதலடி "அழுக்குடம்புச் சீழ்நீரான் யாத்தசீர் மெல்லியலை யாண" என்றிருந்தது. அழுக்குடம்பு யாத்தசீர் மெல்லியலை யாண" எனவும் மாற்றப்பட்டன. பொருள் வேறுபடாவாறு நாற்சீரடியாய்க் கொண்ட மாறுதலைப் புலவருலகம் வெறாதெனத் துணிந்தேன். ஐந்து சீரடிப் பொருளை நாற்சீரடி தரும் பான்மையை உய்த்துணர்ந்தறிக. 12 ஆம் வேறுபடும் என்ற வில்பா செய்யும் என்னும் வாய்பாட்டு வினைமுற்று பலர்பாற் படர்க்கைக்குப் பயனிலையாய் நிற்கின்றது, 14 ஆம் பாவினும் "ஆரும்" என்னும் செய்யும் என் வாய்பாட்டு வினைமுற்று "வெறுக்கையிலார்" என்னும் எழுவாய்க்குப் பயனிலையாய் நிற்கின்றது. அவை யிரண்டிற்கும் வேறு வகையாகப் பொருள் காண முயன்றும் முடியாது விடுத்தேன்.