பக்கம் எண் :


13

"பெண்பாலுகந்திலனேற் பேதாயிருநிலத்தோர்
விண்பாலியோ கெய்திவீடுவர் காண் சாழலோ"

என்ற மணிவாசகர் திருவாக்கும் இதனை வலியுறுத்தும்.

"சிவம் சத்தி தன்னையீன்றும் சத்திதான் சிவத்தை யீன்றும், உவந்திருவரும் புணர்ந்திவ் வுலகுயிரெல்லா மீன்றும்" எனவரும் சிவஞான சித்தியாரையும் காண்க. "உலகம் மலிந்து கெழீஇய" எனவே யான் எடுத்த கருமம் இடையூறின்றி இனிது முடிவதற்கு அவ்விறைவனை வணங்குகின்றேன் என்பது குறிப்பு ஆயிற்று.

(இலக்கணக் குறிப்பு) தரீஇய-தந்த, இஃது சொல்லிசையளபெடை. விரிசடை - வினைத்தொகை. வாலிழை - பண்புத்தொகைப் புறத்துப் பிறந்த அன்மொழி. தூய்மையாகிய அணியுடையாள் என்பது பொருள். அமரிய-செய்யிய என்னும் வாய்பாட்டு வினையெச்சம் அமர என்பது பொருள். இது காரண காரியப் பொருட்டாய் நின்றது. கொழு-மழு. வேல்-ஆயுதம் என்ற பொருள்பட நின்றது. இது இரு பெயரொட்டு. கூட்டுஆ=துணையாக. கெழீஇய-பலவின்பால் வினைமுற்று. அமர அது துணையாக உலகம் மலிந்து கெழீஇய என வினை முடிவு செய்க.