(வி-ம்) அறவுரை கேட்டுய்யுந்தன்மையில்லாதது பேய் என்பதை விளக்க "தீக்கழுது" என்றார். பேய்க்கு அறவுரை கூறிலன் கண்ணன் என்பது தோன்ற "அமரிற் சொற்ற அறவுரை" என்றார். அயலானுக்குக்கூறிய அறவுரையை விரும்பிக் கேட்டுப் பேயும் உயர்ந்தது என்றால் மக்களாய்ப் பிறந்தவர் தமக்கு அறிஞர் கூறும் அறவுரையைக் கேட்பின் உயர்வார் என்பது கூறாமலே விளங்கும். அதனை ஆராய்ந்து பாருங்கள் என்பார் "வகை தேர்மின்" என்றார். மறம் என்பது வீரத்தையுணர்த்தாது பாவத்தை யுணர்த்திற்று; அல்லல் மறம் என்று கூறிய குறிப்பினால். வீரம் புகழ்விளைத்துச் சுவர்க்கம் புகுவிக்கும் என அறிக. வழக்கு-வழக்கம். இது மக்கட்குப் பொருந்திய வழக்கமாகும் என்று கூறுவார் "வாய்த்த வழக்கு" என்றார். வீழ்கழுது தீக்கழுது எனத்தனித்தனி கூட்டுக. பேய் பகவத்கீதை கேட்டு வைகுந்தம் அடைந்த கதையைப் பாகவத்திற் காண்க. (இ-பு) அறவுரை-அறத்தைப் பற்றிக் கூறுங்கூற்று என விரியும். இரண்டனுருபும் பயனும் தொக்கதொகை. வீழ்தீக்கழுது-முன்னது வினைத்தொகை. பின்னது பண்புத்தொகை. தேர்மின் - முன்னிலைப்பன்மை யேவல்வினைமுற்று. அறம், பொருள், எனபன ஆகு பெயராய் அறநூலையும் பொருள்நூலையும் உணர்த்தின. ஒறுக்க - வியங்கோள். ஒறு+க=ஒறுக்க, க. விகுதி. பொன்றா-ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம். (1) 2. | பொருள்விழைவார் போற்றா ருடனல னம்மை | | யருள் விழைவா ரஃதே முழுவெவ்வம் பாய் நீ | | லிருளிழையார் வீழ்வார்மேற் பாலாக்கா ராமா | | றருளிழையார் தாமு மது. |
(சொ-ள்) பொருள் விழைவார் உடல் நலம் போற்றார் - செல்வப்பொருளைச்சேர்க்க விரும்புவோர் தம் உடல்நலத்தைப் பேணார், நம் ஐ அருள் விழைவார் அஃதே - நம் இறைவனருளைப் பெற விரும்புவோர் இயற்கையும் அதுவேயாம், முழு எவ்வம் பாய் நீல் இருள் இழையார் வீழ்வார்-துன்ப முழுவதும் பரவுதற்கு ஏதுவாய நீல நிறமான
|