(இ-பு) உடல்+நலன் = உடனலன். நலம்-நலன் இறுதிப் போலி. விழைவார்-வினையாலணையும் பெயர். இழையார்-நகையணிந்தவர் இழையார்-செய்யாதவர் முன்னது பொருட்பெயர். பின்னது எதிர்மறை வினையாலணையும் பெயர். (2) | 3. | கோலப் புறவின் குரற்கூவிப் புட்சிமிழ்த்தோன் | | காலிற் றளைபரப்பச் சீரொலிக்கு-மாலின் | | விரிநிழ றாமெய்தார் தீப்பழுவத் துய்ப்பர் | | உரிமை யிவணோரா தார். |
(சொ-ள்) கோலம் புறவின் குரல் கூவி புள் சிமிழ்த்தோன்-அழகிய புறாவின் குரல் போலத்தான் கூவியழைத்து அப்புறவாகிய பறவையைப் பிடித்துக் கூட்டிலடைத்தவன், காலில் தளைபரப்ப சீர் ஒலிக்கும்-(மறுபிறப்பில் அவனுடைய) காலில் விலங்கு பூட்ட (சிறையிலடைக்க) தன் நிலைமையைக்குறித்துப் புலம்புவன், உரிமை இவண் ஓராதார்-இவ்வுலகில் தாம் செய்ய வேண்டிய கடமைகளை அறியாதவர், மாலின் விரி நிழல் தாம் எய்தார்-திருமாலின் திருவடியின் விரிந்த நிழலையடைவதற்குரிய செயல் புரியார், தீப்பழுவத்து உய்ப்பர்-கொடிய நரகம் என்ற கானகத்தில் தம்மைச் செலுத்துதற்குரிய பாவச் செயல்களைச் செய்வார். (க-து) தாம் செய்யுங் கடமையறியாத மாந்தர் பாவம் பல புரிந்து நரகத்துன்பத்தையடைவர். திருமாலின் திருவடியைச் சேர்தற்குரிய அறவினையைப் புரிவதே மாந்தர் கடமையாம். (வி-ம்) மனை, மக்கள், சுற்றம், செல்வம் முதலிய பொருள்கள் யாவும் இறக்கும்போது துணையாக உடன்வாரா; அறம், பாவம் என்ற இரண்டுமே உயிருடன் கூடிச்செல்லும் துணையாம் என்ற உண்மையை உணராதவர் என்பது தோன்ற "உரிமையிவண் ஓராதார்" என்றார். "அத்தமும் வாழ்வு மகத்து மட்டேயிங்கழுது விம்மி, மெத்திய மாதரும் வீதிமட்டே விம்மி விம்மியிரு, கைத்தலமேல் வைத்தழுமைந்தருஞ் சுடுகாடு மட்டே, பற்றித் தொடரு" மிருவினை புண்ணியம் பாவமுமே. என்ற கவியின் கருத்தினை
|