(வி-ம்) மேகம் கடலிலுள்ள உவர் நீரை மாற்றி நன்னீராக்கி மழை பொழிகிறது. அதுபோலச் சான்றோர்கள் மக்களிடத்துள்ள அறியாமையைக் கேட்டு அறிந்து அறிவுரை வழங்குவர். மேகம் மழை பெய்து பின் எவ்வாறு பலவகையான உணவு உடைக்குரிய பொருள்களை வளரச் செய்கின்றனவோ அதுபோலச் சான்றோரும் அறிவுரை வழங்கி மக்களுயிர்க்குக் காவலாகிய செயல்கள் செய்வித்து வளர்ப்பர். ஆதலால் மேகம் சான்றோருக்கு உவமையாயிற்று. ஏமம்-காவல், இன்பம். இன்பமெனப் பொருள் கொண்டு இன்பத்திற்குரியவற்றை உண்டாக்குவதும் வளர்ப்பதும் என்றும் கொள்ளலாம். உயிர்க்குக் காவலாகிய செயலாவன. "கடவுள் வணக்கம்; அறம் புரிதல், முத்திக்குரிய நெறியறிதல் முதலிய நற்செயல்களாம். இவற்றை வளர்த்துப் பெருக்குவது உயிர்கள் பிறப்பிலுழன்று நரகஞ்சேர விடாது தடுப்பதனால் காவலாயிற்று. இன்பத்திற்குரிய செயலும் இதுவேயாம். சான்றோர், மக்களது அறியாமையை நீக்கி அறிவுரை வழங்கி அதனால் நற்செயல் புரிவித்துக் காப்பர் என்று கூறினர் என அறிக. (கு-பு) கடல் என்பது ஆகுபெயராய் அதன் நீரையுணர்த்தியது. தீ-இனிமை. எழிலி முகந்து பெயலை ஊழ்க்கும் எனவும், பண்பறிந்தோர் சால்பு, அகற்றி உறுத்தல், படைத்து ஆக்கல் எனவும் கூட்டிப் பொருள் கொள்க. அதுபோல என உவமையுருபு வாராததால் இது எடுத்துக் காட்டுவமையணி. 10. | இடிப்பதென் றெண்ணி யிறைவானைக் காயார் | | முடிப்ப ருயிரெனினு முன்னார்-கடிப்பக் | | கன்றமர்ந்து தீம்பால் கலுழுமே நீண்மோத்தை | | யொன்ற வுணராதா ரூங்கு. |
(சொ-ள்) இடிப்பது என்று எண்ணி இறைவானை காயார்-இடிவிழச் செய்கின்றது என்று கருதிச் சிறிதும் மேகத்தை வெறுக்க மாட்டார்; (மக்கள் யாவரும்) உயிர் முடிப்பர் எனினும் முன்னார்-தம் உயிரைப் போக்குவார் (இவர்) என்று தெரிந்தாலும், முன்னார்-(அத்தகைய கொடியோர் உயிரை நாம்
|