பொருட்பால் இது பொருளைப் பற்றிக்கூறும் பிரிவு எனப்பொருள்படும். அறத்தையும் இன்பத்தையும் பொருள் தருதலின் நடுவாகப் பொருட்பால் வைக்கப்பட்டது.11. | உண்மையொராப் பித்த ருடைமை மயக்கென்ப | | வண்மையுற வூக்க லொருதலையே-கண்ணீர் | | இருபாலுந் தோன்றன்ன வீர்க்கலார் போழ்வாள் | | இருபா லியங்கலினோ டொப்பு |
(சொ-ள்) உண்மை ஒரா பித்தர் உடைமை மயக்கு என்ப-உண்மையையறியாத மயக்க முடையவர் செல்வத்தை மயக்கம் தருவது (சிறந்தது அன்று) என்று கூறுவர். ஒருதலையே வண்மை உற ஊக்கல்-துணிவாகவளம் பொருந்தும்படி தேடுவதற்கு ஊக்கங்கொள்க. கண்ணீர் இருபாலும் தோன்று அன்ன-கண்ணின் நீர்மை போன்ற இருபக்கமுள்ள அறம் இன்பங்கள் தோன்றுவதாகிய அத்தன்மையுடையது (செல்வம்) ஈர்க்கலார் போழ்வாள் இருபால் இயங்கலினோடு ஒப்பு-வெட்டுவோர்க்கு வெட்டும் வாளாயுதம் இருபாலும் இயங்குவதனோடு ஒப்பாகும் அது. (க-து) செல்வம் அறம் இன்பங்களைத் தோன்றுவிக்கும். செல்வ மிருப்பது வீரர்களுக்கு வாளாயுதம் இருப்பது போன்றது. ஆதலாற் செல்வத்தைத் தேட வேண்டியது மக்கள் கடமையாம். (வி-ம்) செல்வத்தினால் அறஞ் செய்து, இன்பத்தையும் நுகர்ந்து பின் முத்தியை யடையலாம் என்ற உண்மையறியாதவர் செல்வத்தைச் சிறப்பாக மதிக்கமாட்டார். அது மயக்கத்தைத்தருவது என்று வெறுப்பார். அவ்வாறு வெறுப்பவர்க்குத் துறவு வாழ்க்கையே தக்கது. இல்வாழ்விலிருப்பவர் அவ்வாறு கூறினால் அது மயக்கமேயாம் என்ற கருத்து வெளிப்பட
|