பக்கம் எண் :


29

"உண்மை ஒராப் பித்தர்" என்றார் பித்தர் என்றது துறவிகளையே குறிக்கும். வண்மையுற - வளம்பொருந்தும்படி, பெருகும்படி, ஊக்கல் - ஊக்குக. வியங்கோள். கண்நீர் இருபால் என்பது இரண்டு கண்போன்ற அறம். இன்பங்களையுணர்த்தியது. மக்கள் வாழ்வின் பயன் அறஞ்செய்தலும் இன்பந்துய்த்தலுமே. ஆதலின் அவையிரண்டும் இரு விழிகளாகக் கொள்ளப்பட்டன. இருபால் என்பது, அறம் பொருள் இன்பம் என்ற மூன்றின் நடுவினிற்கும் பொருளுக்கு இருபக்கத்தின் நிற்கும் பொருள்களாகிய அறத்தையும் இன்பத்தையும் உணர்த்திற்று "வடுவிலா வையத்து மன்னிய மூன்றின், நடுவண தெய்த விருதலையும் எய்தும்," எனவும், "ஒண்பொருள் காழ்ப்ப வியற்றியார்க்கெண்பொருள், ஏனையிரண்டும் ஒருங்கு" எனவும் செலவப்பொருள் அறத்தையும் இன்பத்தையும் தரும் எனக்கூறியிருப்பதும் நோக்குக. வீரர் கையில் வாளிருந்தால் அதுஇரு பக்கமும் செல்வது போலப் பொருளும் இருபக்கமும் செல்லும், பொருள் இருபக்கம் செல்லுதலாவது அறம் இன்பம் ஆகிய இருபாலும் செல்வது. வாள்பகையைத் தொலைப்பது போலச் செல்வமும் பசி பிணி முதலியவற்றைத் தொலைக்கும் எனக்கொள்க.

(கு-பு) ஓரா ஒரா எனக்குறுக்கல் விகாரமாயிற்று. என்ப-பலர்பாற்படர்க்கை வினைமுற்று. தோன்று-முதனிலையே தொழிற்பெயர்ப் பொருளைத்தந்தது. அன்னது குறைந்து அன்ன என நின்றது. தொகுத்தல். ஈர்க்கலார்-ஈர்க்கல் என்ற தொழிலுடையவர்-ஆர்-விகுதி.

12.உடைமையறா தீட்ட லுறுதுணையாம் யாண்டும்
உடைமையராச் சென்றக்கா லூரெல்லாஞ் சுற்றம்
உடைமைக்கோ லின்றங்குச் சென்றக்காற் சுற்றம்
உடையவரும் வேறு படும்

(சொ-ள்) அறாது உடைமை ஈட்டல் யாண்டும் உறுதுணையாம் (ஒருநாளும்) நீங்காது செல்வத்தைச் சேர்க்க வேண்டும். அஃது எவ்விடத்தும் மிக்க துணையாகும்; உடைமையரா சென்றக்கால் ஊர் எல்லாம் சுற்றம் - செல்வமுடையவராகி அயலூர்க்குச் சென்றால் சென்றவூரில் உள்ளவர்