தண்ணீரார் என்பது சான்றோரை யுணர்த்தியது. தண்மை-அருள்-நீர்-பண்பு-ஆர்-விகுதி அருட்பண்புடையார் என்பது திரண்ட பொருள். அவர் சாரும் நிலம் எனவே முத்தியுலகம் என்பது குறிப்பாற் கொள்ளப்பட்டது. உண்ணீர்-உண்மைத்தன்மை. அறியின்-அறியவிரும்பினால் யான் கூறுகின்றேன் என்பது குறிப்பு. வெள்நீர்ச் சிறியர்-நுண்ணிய அறிவில்லாதவர். ஏர்ப்படுத்தும்-அழகுபடுத்தும், பெருமைப்படுத்தும் என்பது அது. நீரும் நிழலும் நிலம் பொதியும் நெற்கட்டும், பேரும் புகழும் பெருவாழ்வு-மூரும் வருந்திருவும் வாழ்நாளும் வஞ்சமிலார்க்கென்றும் தருஞ்சிவந்த தாமரையாடான், என்ற கவியின் கருத்தை அடியொற்றியது இது. (கு-பு) மண்ணீர் - ஆகுபெயர். தண்மை+நீர்-தண்ணீர், உண்மை+நீர்-உண்ணீர், அருமை+செவிலி-அருஞ் செவிலி இவை பண்புத் தொகை. பொருள்-எழுவாய். ஏற்படுத்தும்-பயனிலை. செய் என்பதற்கு நீ என்ற எழுவாய் வருவிக்கப்பட்டது. 14. | மெய்வலியுஞ் சென்னிலையும் வாழ்நாளுந் தூவொழுக்கு | | மெய்யா வளிக்கும் வெறுக்கையிலார்-வையத்துப் | | பல்கிளையும் வாடப் பணையணைதோள் சேய்திரங்க | | வொல்குயிர்நீத் தாரு நரகு. |
(சொ-ள்) வெறுக்கை-பொருட்செல்வமானது (எல்லார்க்கும்) , மெய்வலியும்-உடல்வலியும், செல்நிலையும்-தம்வாக்கு எங்குஞ் செல்கின்ற நிலைமையும், வாழ்நாளும்-நீண்ட வாயுளும், தூஒழுக்கும்-தூயவொழுக்கமும், மெய்யாஅளிக்கும்-உண்மையாகக் கொடுக்கும், இலார்-செல்வமில்லாதவர்கள், வையத்து-இவ்வுலகில், பல்கிளையும் வாட-பலசுற்றாத்தாரும் வருந்தும் படியும், பணை அணை தோள் சேய்திரங்க-மூங்கில் போன்ற தோளுடையவள் ஆகிய மனைவி மக்கள் மெலிந்து வருந்தும் படியும் (விடுத்து) ஒல்கு உயிர் நீத்து-குறைவாகிய உயிரைப் போக்கி, நரகு ஆரும்-(மறுமையிலும்) நரகத்திற் சேர்வர்.
|