பக்கம் எண் :


33

(க-து) ஒருவருக்குச் செல்வமானது உடல்வலி செல்வாக்கு. வாழ்நாள், நல்லொழுக்கம் இவற்றைக் கொடுக்கும், செல்வமில்லாதவர் இம்மையிற் சுற்றம் மனைவி மக்கள் வாடும்படி வாழ்ந்து பின் இறந்து மறுமையில் நரகத்தை யடைவர். ஆதலாற் செல்வத்தைத்தேடுக.

(வி-ம்) வெறுக்கை என்பது எழுவாய்; அளிக்கும் என்பது பயனிலை. ஆதலால் முன்கொண்டு கூட்டப்பட்டது. பொருளுடையவர், வேண்டும் உணவுண்டு உடல்வளர்ப்பதற்குத் தகுதியுடையவ ராதலால் மெய்வலியை வெறுக்கையளிக்கும் என்றார். செல்+நிலை=சென்னிலை, செல்லும் நிலைமை. இது சொற் செல்லும் நிலைமையை யுணர்த்தியது. பொருளுடையவர் ஏவினால் அப்பணியைச் செய்ய எவரும் வருவர். செல்வர் வாக்கு எங்குஞ் செல்லும். ஆதலால் அதற்குச் செல்வாக்கு என்று பெயர். நோயின்றி உடலை வளர்ப்பதும் கவலையின்றி வாழ்வதும் ஆகிய காரணத்தால் வாழ்நாளும் நீட்டிக்கும் என்று கூறினார். அறிஞர் பலர் வந்து பொருள்கருதி அறவுரை கூறுவர். ஆதலாற் கீழ்மக்களும் அதனைக் கேட்டுக்கேட்டு நல்லொழுக்கமுடையவராவர் என்பது கருத்து. இலார் என்பது. முன்னின்ற வெறுக்கையைப் பின்னும் கூட்டி வெறுக்கையிலார் என்று பொருள் கொள்ளப்பட்டது.

(கு-பு) ஆரும் என்பது பயனிலை. ஆரும் என்னும் வினைமுற்று பலர் பாற்படக்கைக்கு முடிபாகாது. ஆயினும் இழிவு கருதிவந்தது எனக்கொண்டு வழுவமைதி யென்க. பணையணைதோள் என்பது அன்மொழித்தொகை. அணை உவமையுருபு. வாட, திரங்க, நீத்து, நரகு, ஆரும் என வினைமுடிவுசெய்க. நரகு-ஏழனுருபு இறுதியில் தொக்கு நின்றசொல்.

15.குருட்டாய னீள்கானங் கோடல் சிவணத்
தெருட்டாயங் காலத்தாற்சேரான்-பொருட்டாகான்
நல்லறமும் பேணானா நாரமிவர்த் தானாம்
பொல்லாங் குறைவிடமாம் புல்.