பக்கம் எண் :


35

போலப் புல்லியன் என்ற பொருளைத்தந்தது. "ஆன முதலிலதிகஞ் செலவானான், மானமழிந்து மதிகெட்டுப்-போனதிசை எல்லார்க்குங் கள்ளனாய் ஏழ்பிறப்புந்தீயனாய். நல்லார்க்கும் பொல்லானாம் நாடு" என்ற கவியிற் பல தீமைவிளையும் இல்லாதவனுக்கு என்று கூறியிருப்பதாற் "பொல்லாங்குறைவிடமாம்" என்றார்.

(கு-பு) நீள்கானம்-வினைத்தொகை: கோடல்-கொள்ளுதல், இது தொழிற்பெயர். சிவண-உவமையுருபு. சேரான்-வினையாலணையும் பெயர். சேரான் எழுவாய்; ஆகான், பேணான், இவர்த்தான் என்பன பயனிலைகள். ஆம் இரண்டும் அசை.

16.முப்பொருளுண்மை தெளிவா னருஞ்சீலன்
முப்பொருளுண்மை யுடையா னருமுனிவன்
முப்பொருளுண்மை மடுப்பானிறை யாங்கு
முப்பொருளுண்மைக் கிறை.

(சொ-ள்) முப்பொருள் உண்மை தெளிவான் அருசீலன்-(அறம் பொருள் இன்பம் என்ற) மூன்று பொருள்களின் உண்மை இயல்புகளை யுணர்ந்து தெளிந்தவன் அருமையான நல்லொழுக்க முடையவனாவான். முப்பொருள் உண்மையுடையான் அருமுனிவன்-அம்மூன்று பொருள்களின் உண்மையறிவுடையவன் அரிய தவ முனிவனாவான். முப்பொருள் உண்மை மடுப்பான் இறை-அம்மூன்று பொருள்களின் உண்மையை மனிதர்கட்குக் காட்டி வளர்ப்பவன் அரசனாவான், முப்பொருள் உண்மைக்கு இறை-அம்மூன்று பொருள்களும் மெய்ப் பொருளுக்கு உறைவிடமாம்.

(க-து) அறம் பொருள் இன்பம் என்ற மூன்று பொருள்களின் இயல்புணர்ந்து தெளிந்தவன் நல்லொழுக்கமுள்ளவன்; அவற்றை அறிந்தவன் முனிவன்; அவற்றை மனிதர்க்குக் காட்டிப் பெருக்குவோன் அரசன். பரம்பொருட்கு இருக்குமிடமும் அவையாம்.

(வி-ம்) உண்மை தெளிவான் என்றது, அறம் இத்தன்மையுடையது; இவ்வாறு செய்யவேண்டும்; இன்ன பயனைத் தரும் என்றும், பொருள்