பக்கம் எண் :


36

என்பது இது; பொருளை இன்னவாறு ஈட்டவேண்டும்; இவ்வாறு செலவழிக்கவேண்டும்; அதனால் இன்ன பயன் விளையும் என்றும், இன்பம் என்பது இன்னது; அதனை இவ்வாறு துய்த்தல் வேண்டும்; அதனால் விளையும் பயன் இது என்றும் ஒவ்வொன்றினியல்பும் கல்வி கேள்வி வாயிலாக அறிந்து ஐயம் நீங்கித் தெளிந்தவன் என்பதையுணர்த்தும். தெளிந்தவன் முறையறிந்து அவற்றைத் தேடித் துய்த்து வாழ்வதனால் அவன் நல்லொழுக்கமுடையவனாவான் என்றார். முனிவர்கள் அவற்றைத் தேடமாட்டார்; ஆதலின் அவற்றின் இயல்பறிந்தவரை முனிவர் என்றார். இம்மூன்றையும் மக்கள் முறையே தேடி வாழும்படி காவல்புரிபவன் அரசன் என்பது கருதி 'மடுப்பவன் இறை' என்றார். உண்மைக்கு-மெய்ப் பொருளுக்கு இஃது பரம்பொருளாகிய கடவுளுக்கு எனப் பொருள் தந்தது. உண்மைக்கு முப்பொருள் இறை என முடிக்க-இறைவன் இம்மூன்று பொருள்களிலும் தங்கியிருப்பான் என்பது. எனவே இம்மூன்று பொருளையுணர்ந்து வாழ்வு நடத்துவோர்க்கு இறைவனருள் எளிதில் கிட்டும் என்பது கருத்து.

(கு-பு) மூன்று+பொருள் - முப்பொருள் பண்புத்தொகை. தெளிவான்-வினையாலணையும் பெயர். மடுப்பான் என்பதும் அது. உடையான் குறிப்பு வினையாலணையும் பெயர். ஆங்கு-அசை. சீலன், முனிவன், இறை என்பன பெயர்ப் பயனிலை.

17.கால்கலத்தாற் சேர்பொருளுங் கண்ணற்றார் தேர்பொருளும்
நாலிரண்டாற் கூடு நலப்பொருளுங்-கோல்தாங்கிக்
கோடு மரசிற் குரியாமே தொல்புவிக்கீழ்
ஆடும் பொருளோ டணைந்து.

(சொ-ள்) கால் கலத்தால் சேர் பொருளும்-வண்டியாலும் கப்பலாலும் வந்து சேர்கின்ற சுங்கப் பொருளும், கண்ணற்றார் தேர் பொருளும்-அறிவில்லாதவர் தேடிய பொருளும், நால் இரண்டாற்கூடு நலப்பொருளும்,-வருவாயில் ஆறிலொரு பங்காகக் கொடுக்கும் நலமான பொருளும், தொல்புவிக்கீழ் ஆடும் பொருளோடு அணைந்து-பழைமையான புவிக்குக்கீழ் அசை