பக்கம் எண் :


39

வரைதல், பல பொருள் ஒரு சொல்லாயினும் இங்கு நீக்குதல் என்ற பொருளைத் தந்தது. பொருளீட்டுந் தொழிலை நீக்குவது என்க. பொருள் தேடும் வழி தெரியாமலே இருப்பதன்றி அது அறிஞர் செயலாகாது என்பார் "தேராமை" என்றார். இறக்கும்போது மனைவி மக்கள் பொருள் இன்றி வருந்திப் பின்னாளில் என் செய்வாரோ என்று நினைத்து அவர்கள் முகத்தை நோக்கி, நோக்கிப் புலம்புவார் 'என்பது தோன்ற "சாம்போழ்தலறும் தகைத்து" என்றார்.

(கு-பு) ஆகும் போகும் என்ற வினைமுற்றுக்கள் ஈற்றயல் கெட்டுஆம் போம் என நின்றன. வினையான்-இதில் ஆன் மூன்றனுருபு; கருவிப் பொருளில் வந்தது. ஓம்பு+ஒம்பு+என்பன: ஓம்போம்பெனக் குற்றியலுகரங் கெட்டுப் புணர்ந்தன. ஏம்போம்-தன்மைப் பன்மையெதிர் மறைவினை முற்று. ஏம்பு+ஓம் - விகுதி; எதிர்மறையிடைநிலை ஆகாரங் கெட்டதெனக் கொள்க. தகைத்து-ஒன்றன்பாற் குறிப்பு வினைமுற்று. வரைதல்-தொழிற் பெயர். தேராமை-எதிர்மறைத் தொழிற் பெயர்.

19.பட்டாங்குத் தூயர் பழிச்சற் குறியராய்
ஓட்டின் றுயர வுலகத்தோர்-கட்டளை
யாம் வெறுக்கை யின்றி யமையாரா மையாவின்
ஆம் வெறுக்கை நிற்க வுடம்பு

(சொ-ள்) உலகத்தோர்-உலகத்துள்ள மக்கள், பட்டாங்கு-உண்மையாக, தூயர் பழிச்சற்கு உரியராய்-தூய்மையுடையவராகவும் துதிப்பதற்கு உரியவராகவும், ஒட்டு இன்று உயர-ஒப்பில்லாமல் உயர்வதற்கு, வெறுக்கை கட்டளையாம்-செல்வமே உரைகல்லாம், இன்றி அமையாராம்-அச் செல்வமில்லாமல் (வேறொன்றாலும் அளப்பதற்கும்) பொருந்தார் ஆம். உடம்பு நிற்க- (செல்வமின்றி) உடல்மட்டும் நின்றால், மையாவின் வெறுக்கை ஆம்-காட்டுப் பசுவைப்போல வெறுப்பதற்கு உரியதாம்.