இன்பப்பால் 20. | அறங்கரை நாவானா மாய்மயிலார் சீரில் லறங்கரையா நாப்பணடைவாம்-புறங்கரையாத் திண்மை நிலையி னுயர்புலத்திற் சேர்வாமீண் டெண்ணிலைக குய்வா யிது. |
இன்பத்தின் பகுதியைக் கூறுவது இது. ஐம்புலனுகர்ச்சியிற் சிறந்த இன்பமாவது மங்கையர் காமவின்பமேயாதலின் அதனைக்கூறும் பகுதியாம். மூன்றாவதாக இன்பப்பால் வைக்கப்பட்டுள்ளது.(சொ-ள்) அறம் கரை நாவான் ஆய் மயிலார் சீர் ஆம்-அறங்கூறும் நாவினால் ஆராய்ந்த மயில்போன்ற மகளிருடன் கூடிவாழும் சிறப்பு (ஒருவனுக்கு) உண்டாகும், இல்லறம் கரையா நாப்பண் அடைவுஆம், இல்லறத்தின் முடிவாக நடுவுலகம் (பொன்னுலகம்) அடைவது கூடும், புறம் கரையா தின்மை நிலையின் உயர்புலத்திற் சேர்வு ஆம்-புறத்தொழுக்கிற் சென்று தளராத வலிமையான நிலையால் உயர்ந்த முத்தியாகிய இடத்திற்குச் சேர்வதும் கூடும், ஈண்டு எண் நிலைக்கு உய்வாய் இது (ஆதலால்) இவ்வுலகத்தில் ஆராய்ந்த நிலைகட்கு எல்லாம் செலுத்துகின்ற வழி, இவ்வழியேயாம். (க-து) இல்லறமே சுவர்க்கத்துச் செல்லுவதற்கும், முத்தியுலகம் அடைவதற்கும் வழியாகும். ஆதலால் இல்லறத்தை நல்லறமாகக்கொள்ளல் வேண்டும் மக்கள் யாவரும். (வி-ம்) உலகத்தார்க்கு அறவுரை வழங்கும் அறிவுடையோனை மகளிர் மணந்து வாழவிரும்புவர் என்ற கருத்தினால் அறம் கரைநாவான்........ஆம் என்றார். கல்வியறிவில்லாத கயவனை மணந்து இல்லறம் நடத்தக் கன்னியர் எண்ணார் என்பது கருத்து. இல்லறம் இனிது நடத்தி அறம் புரிந்து வாழ்வார் சுவர்க்கஞ் செல்வது உறுதியாதலால் "நாப்பண் அடைவு ஆம்" நாப்பண்-நடு. இது முத்தியுலகத்திற்கும் மண்ணுலகத்திற்கும் நடுவில் இருப்பது கருதி, நாப்பண் எனப்பட்டது அன்றியும் மண் விண் பாதலம் என்ற முறையில் நடு
|