பக்கம் எண் :


42

நற்றலாலும் நாப்பண் என்பது பொருந்தும். புறங்கரையாத்திண்மை நிலையாவது; இல்லறத்திலிருந்து பரத்தையர் முதலிய பிற மகளுடன் கூடித் தகாத செயல் புரியாமல் தன் மனைவியையன்றிப் பிறமாதரை மனத்தானும் நினையாது வாழும் வலிய நிலைமை இந்நிலை தவத்திற்கொத்த நிலையாம். இதனையே வானப் பிரத்தம் என்பர் வடநூலார். மனைவியும் தானும் வனமடைந்து நோற்றல் என்பர் தமிழர். இந்நிலையினிற்பவர் முத்தியுலகஞ் சேர்வர் என்பது நூற்றுணிபாதலின் "உயர்புலத்திற் சேர்வு ஆம்" என்றார். உயர்புலம்-உயர்ந்த இடம், இது முத்தியுலகத்தையுணர்த்திற்று. இல்லறத்திருப்பவன் சுவர்க்கமும் அடையலாம் பின் முத்தியுலகத்தையடையலாம். எவ்விடத்திற்கும் செலுத்துகின்ற வழியாக இல்லறம் இருக்கின்றது என்பார் "உய்வாய்" என்றார். வாய்-வழி உய்க்கும் வழி எனப் பொருள் கொள்க.

(கு-பு) கரைநா-வினைத்தொகை. நாவான்-ஆன் மூன்றனுருபு. ஆய்மயில், உயர்புலம், எண்ணிலை, உய்வாய் என்பன வினைத்தொகைகள்; கரையா; கரையாக என்பது ஈறுகெட்டு நின்றது. கரையாத்திண்மை; ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம். அடைவு, சேர்வு தொழிற் பெயர்கள்.

21. துணையென்ப காம விருந்துய்ப்பார் தோமில்
இணைவிழைச்சின் மிக்காகா ராகல்-புணைதழீஇக்
கூட்டுங் கடுமிசையான் கட்டியிற் கொண்டற்றால்
வேட்டபோழ் தாகு மணி.

(சொ-ள்) காம விருந்து துய்ப்பார் துணையென்ப-காமவின்பமாகிய விருந்துண்பவர் (கணவனும் மனைவியும்) முத்தியுலகஞ் செல்வதற்குத் தக்க துணையாவார் என்று ஆன்றோர் கூறுவர். தோமில் இணைவிழைச்சில் மிக்காகார் ஆகல் (அவர்கள்) குற்றமில்லாத புணர்ச்சியின்பத்தின் மிகாதவர்களாகுக. புணை தழீஇ கூட்டும், அது புணையாகி அவர்களைத் தழுவி முத்தியிற் சேர்ப்பிக்கும். வேட்டபோழ்து ஆகும் அணி-மணம் புரிந்த