எனப் பொருள் கொள்ளினும் பொருந்தும். ஆகல்:வியங்கோள். ஆகுக என்பது, தழுவி என்பது தழீஇ என அளபெடுத்தது. மிசையான்:எதிர்மறை வினையாலணையும் பெயர். கடு-கசப்பு. இது மருந்தினை யுணர்த்தியது. கட்டியிற் கொண்டு ஊட்டினாற்போன்ற என வருவித்து முடிக்க. அற்று+ஆல்: அசை. 22. | ஒப்புயர்வில் வேட்டோ னொருநிலைப்பட் டாழ்ந்தசெயல் நப்பின்னை ஞால மொருங்கறிக-துப்பாராய்த் தூமலரின் மென்மையுறு தோற்றத்தே வைத்துய்க்க ஏமக் கிழத்தி யறிந்து. |
(சொ-ள்) ஒப்பு உயர்வில் வேட்டோன் ஒரு நிலைப்பட்டு ஆழ்ந்த செயல்-ஒப்பில் உயர்வு இல்லாமல் (காதலன் காதலியிருவரும் ஒப்பென்று கருதி) மணந்தவன் ஒரு நிலைமையடைந்து (இன்பத்தில்) ஆழ்ந்திருந்த செய்தியை, நப்பின்னை-நப்பின்னை (வாழ்வால் அறியலாம்) , ஞாலம் ஒருங்கு அறிக-உலக முழுவதும் அறிந்து கொள்க, ஏமம் கிழத்தி அறிந்து. (ஒருவர் தமக்குக்) காவலாகிய இல்லாளை யறிந்து, துப்பார் ஆய் தூமலரின் மென்மையுறு தோற்றத்தே வைத்து உய்க்க-மனத்தூய்மையுடையவராய்த் தூய பூவின் மென்மையாகிய தோற்றத்தையே மனதில் வைத்து (இல்லறம்) நடத்துக. (க-து) நப்பின்னையும் கண்ணனும் காதலுடன் கூடி இல்லறம் நடாத்தியது போல ஒருவர் தமக்கு வாழ்க்கைத்துணையை யறிந்து 'மணம் புரிந்து' மென்மைத் தன்மையாக இல்லறம் நடத்த வேண்டும். (வி-ம்) ஒப்பு-(நாமும் இவளும்) ஒப்பாவோம். உயர்வு இல் (நம்மிருவரில் ஒருவர்) உயர்வில்லை (யென்று கருதி வேட்டோன்) என்றும் பொருள் கூறலாம். ஒப்பு உயர்வு இல் ஒரு நிலைபட்டு-உலகில் தனக்கு ஒப்பாரும் மிக்காரும் இல்லை என்னும் ஒரு நிலைமையடைந்து எனக் கூட்டினும் அமையும். வேட்டோன் ஆழ்ந்த செயல் நப்பின்னை வாழ்விற் காணலாம் என வருவித்து முடிக்க, "மலரினும் மெல்லிது காமஞ்
|