பக்கம் எண் :


45

சிலர், செவ்வி தலைப்படுவார்" என்ற வள்ளுவர் வாக்கிற்கியைய 'தூமலரின்....வைத்துய்க்க'என்றார். ஏமம்-காவல்,இன்பம் ஆகிய பொருளைத்தரும் எனினும் காவல் என்ற பொருளே சிறந்தது. கணவனுக்குக் காவலாக இருப்பவளே மனைவியாவள். "தற்காத்துத் தற்கொண்டாற் பேணி" என்ற குறட் கருத்தும் இதனை வலியுறுத்தும். உய்க்க-செலுத்துக. இவ்வினைமுற்றுக்குச் செயப்படு பொருளாக இல்லறம் என்பது வருவிக்கப்பட்டது. ஒருவர் என்பது தோன்றா எழுவாய். ஒருவர் ஏமக்கிழத்தியறிந்து துப்பாராய்............தூமலரின்.......உய்க்க என வினை முடிவு காண்க.

(கு-பு) ஒப்பு உயர்வு-ஒப்பின் கண் உயர்வு என ஏழாம் வேற்றுமையாம், ஒப்பும் உயர்வும் இல்லாது என விரிக்கின் உம்மைத் தொகையாம். வேட்டோன்:வினையாலணையும் பெயர், அறிக, உய்க்க:வியங்கோள். செயல்:தொழிற்பெயர். தூமலர் பண்புத்தொகை. ஞாலம்:ஆகுபெயர்.

23. பாலை வளர்த்துக் கணங்குழை மாலையுறல்
சால்பென்ப கண்கூடாக் காணாய்-தழைகாதல்
வாலறிவ னாக்க வகையறிக காலத்தால்
தோலொடு நாலைந் தணந்து.

(சொ-ள்) பாலை வளர்த்து - பாலகனை வளர்த்து, தழை காதல்-பெருகிய ஆசையுடன், தோலொடுநால் ஐந்து அணந்து காலத்தால்-அழகுடன் நான்கு அல்லது ஐந்து ஆண்டு கூடிய அக்காலத்தில், வால் அறிவன் ஆக்கவகையறிக-(பள்ளியில் வைத்து) தூய அறிவுடையவனாக்குவதற்கு வேண்டும் வழியினை அறிந்து செய்க, கணங்குழை மாலை உறல் சால்பு என்ப-(அவ்வாறு செய்யின்) திரண்ட காதணிகளையுடைய மங்கையின் இன்பத்தையுறுவது பெருமை என்று சொல்வார் (பெரியோர்) , கண் கூடா காணாய்-அவ்வின்பத்தினை நீ கண்ணுக்குத் தோன்றும்படி காண்பாய்.