பக்கம் எண் :


46

(க-து) நல்ல மைந்தனைப் பெற்றெடுத்து வளர்த்துக் கல்வியறிவுடையனாகச் செய்தால் இல்லறத்தில் மனையாளுடன் கூடியவின்பம் பெருமையுடையதாம்.

(வி-ம்) பால் என்பது பால் உண்ணும் மகனை யுணர்த்தியது. தழை காதல்-பெருகிய ஆசை. தோல்-அழகு., நால் ஐந்து என்றது நான்காம் ஆண்டின் முடிவிலாவது ஐந்தாம் ஆண்டின் தொடக்கத்திலாவது பள்ளியின் வைத்தலைக் கருதிக் கூறியதாம். அணந்து என்ற செய்து என் எச்சத்தைச் செயவென்னெச்சமாக்கிப் பொருள் கொள்க. நால் ஐந்து கூட அக்காலத்தில் வாலறிவனாக்க எனக் கூட்டுக. காலத்தால்-காலத்தில் எனப் பொருள் கொள்க. இளமையிற்கல் என்ற சொற்படி பருவத்திற் கல்வி பயிற்றல் வேண்டும் என்பதைக் குறித்து "நாலைந்து அணந்து காலத்தால்" என்றார். வாலறிவனாக்க வகையறிந்தாலல்லது பெருமையில்லை. இல்லற வாழ்வின் பயன் நன்மகப்பேறே என்பது தோன்ற "கணங்குழை மாலை யுறல் சால் பென்ப" என்றார். பெருமை என்பது பெரியோர் கூற்றாயினும் இஃது கண்கூடாக நீ பார்க்கக் கூடியதுதான் என்பார், "காணாய்" என்றார். பாலகனை வளர்த்துக் கல்வி பயிற்றி அறிவனாக்கிப் பின் கணங்குழை மாலையுறுதல் சால்பு என்று கூறிய பெரியோர் கூற்றைக் கண் கூடாக் காண்பாய் என்பது கூறப்பட்டது.

(கு-பு) பால் பாலகனையுணர்த்தியது; ஆதலால் ஆகுபெயர். கணங்குழை: அன்மொழித்தொகை. என்ப: பலர்பால் வினைமுற்று. கூடாக என்பது கூடா எனக் குறைந்து நின்றது. தழை காதல்: வினைத்தொகை, வாலறிவன்: பண்புத்தொகை.

24. அழுக்குடம்பு யாத்தசீர் மெல்லியலை யாண
முழுக்காட்டி மன்றின்முன் கைத்தாக்-குழீஇக்கூடல்
என்னே செறிகாமம் பூட்டு மியன்மாரன்
மன்னரசான் மாண்பூப் புலகு.

(கொ-ள்) யாத்தசீர் அழுக்கு உடம்பு மெல்லியலை (எலும்பு நரம்பு முதலியவற்றாற்) கட்டப்பட்ட சிறப்புடைய அழுக்குப் பொருந்திய உடலுடைய