பக்கம் எண் :


48

(கு-பு) மெல்லியல் என்பது மெல்லிய இயல்பினையுடையாள் என அன்மொழித்தொகையாயிற்று. அழுக்கு+உடம்பு முழுக்கு+ஆட்டி:குற்றியலுகரம் கெட்டுப்புணர்ந்தன. குழீஇ-என்பது அளபெடையாயினும் தளைகெடவரலால் அலகு கொள்ளாமல் விடுக. குழீ என நிரையசையாக்குக. செறி காமம்:வினைத்தொகை.

25. இன்ப வியலோரார் யாணர் விழைகாமம்
பொன்னி னணிமலரிற் செவ்விதாந்-தன்மேனி
முத்த முறுவன் முயக்கொக்கி னன்னத்தின்
பெற்றியரி னென்பெறும் பேறு.

(சொ-ள்) இன்பம் இயல் ஓரார்-காமவின்பத்தின் இலக்கணங்களை யறியார் (சிலர்) , யாணர் விழைகாமம் பொன்னின் அணிமலரின் செவ்விது ஆம்-புதுமையாக விரும்பும் காமவின்பம் பொன்னைப்போலவும், அழகிய மலரைப் போலவும் சிறப்புடையதாகும், தன்மேனி முத்தம் முறுவல் முயக்கு ஒக்கின்-ஒருவன் தனது உடம்புக்கு முத்துப்போன்ற பற்களையுடையார் புணர்ச்சி இன்பம் கிடைத்தால், அன்னத்தின் பெற்றியரின் பெறும்பேறு என்-அன்னப்பறவையின் இயல்புவாய்ந்த அம்மங்கையராற் பெறும் இன்பத்தினும் வேறு சிறந்த பேறு யாது? (இல்லை) .

(க-து) காமவின்பத்தின் இயல்பறியார் சிலர் இகழ்ந்து பேசுவர். காமம் பொன்மலர் போல அழகும், இன்பமும் தருவது. காமத்தைப் போலச் சிறந்த பேறு வேறு ஒன்றும் இல்லை.

(வி-ம்) யாணர்-புதுமை. ஆயுந்தோறும் அறிவுபெருகுவது போலத் தோயும்தோறும் இன்பம் பெருகுவதால் (புதுமையாய்த் தோன்றுவதால்) "யாணர் விழை காமம்" என்றார். "அறிதோறறியாமைகண்டற்றாற் காமம்" என்பதும் ஆய்க. பொன்னைப் போலக் காமம் எப்போதும் ஒரு தன்மையாய் நிற்கும் என்ற கருத்தினால் "பொன்னின்" என்றார். புனையும் பூ மணந்தந்து மனத்திற்கு இன்பந்தருவது போலக் காமமும் இன்பந்தரும் என்ற கருத்தினால் "அணிமலரின்" என்றார். முத்தமுறுவல் என்பது முத்துப்போன்ற