பக்கம் எண் :


49

பற்களையுடையார் எனப் பெண்களை யுணர்த்தியது. ஒருவன் தன் மேனி மகளிர் புணர்ச்சியின்பத்திற் பொருந்தினால் அதனினும் பெறும் பயன் வேறு ஒன்றும் இன்று என்பார் "முயக்கு ஒக்கின்" என்றார். ஒக்கின்-பொருந்தினால். அன்னத்தின் பெற்றியர்-அன்னம் போன்ற நடையழகுடையவர். (மகளிர்) மகளிரினும் சிறந்த பேறில்லை. மகளிரைக் கொண்டு வாழ்வதே சிறந்த வாழ்வு என்பதாம். "பெண்ணிற் பெருந்தக்க யாவுள கற்பென்னும், திண்மையுண் டாகப் பெறின்" என்ற குறட் கருத்தும் காண்க.

(கு-பு) இன்பம்+இயல்-இன்பவியல்-மகரங்கெட்டு உடம்படு மெய்பெற்றுப் புணர்ந்தது: ஆறாம் வேற்றுமைத்தொகை. விழைகாமம்: வினைத்தொகை. பெண்ணின், மலரின். இன்: உவமையுருபு. முத்தமுறுவல்: அன்மொழித்தொகை. முயக்கு: முதனிலை திரிந்த தொழிற் பெயர். பேறு என்பதும் அது.

26. தூவி நெருஞ்சிக்காய் நீர்முள்ளி தும்பையலர்
காவியன சேற்கட் குறுந்தொடியார்-ஆவிக்
கினிய ரிணைசேரா ரீர்ங்கண் மாஞாலத்
தனிமைக் கவரோர் கரி.

(சொ-ள்) தூவி நெருஞ்சிக்காய் தும்பையலர் நீர் முள்ளி-அன்னப்பறவையின் சிறகிலுள்ள மயிர்கள் நெருஞ்சிக் காய் முட்களாகவும் தும்பை மலர்கள் நீர் முள்ளியின் முட்களாகவும் தோன்று மெல்லிய அடிகளையும், காவி அன சேல்கண் குறு தொடியார்-நீலமலரும் கெண்டை மீனும் போன்ற விழிகளையும் சிறிய வளையலையும் உடைய மகளிர், ஆவிக்கு, இனியர்-(ஆடவரது) உயிர்க்கு இனிமை தருவோராவார்; இணைசேரார்-(அம்மகளிரைத் தமக்கு) இணையாகக் கொண்டு கூடி வாழாதவர்; ஈர்கண் மா ஞாலம்-குளிர்ந்த இடத்தையுடைய பெரிய வுலகத்தில், தனிமைக்கு அவர் ஓர்கரி-தனிமை வாழ்வுக்கு அவ்வாடவர் ஒரு சான்றாவர்.