பக்கம் எண் :


51
27.காமம்வீ ழின்பக் கடலாமே காதலரின்
ஏம விருக்கையே தூந்திரையாம்-ஏமத்தீண்
டாம்பரலே தோன்று மளியூட லாம்பரலிற்
றெற்றித் தெறிப்பா மொளியொளிபாய் கண்ணேசீர்த்
துற்றுகப்பாய்ப் பெற்ற மகவு.

(சொ-ள்) காமம் வீழ் இன்பம் கடல்ஆம்-காமமானது யாவரும் விரும்புகின்ற இன்பக் கடலாகும், காதலரின் ஏமம் இருக்கையே தூம் திரை ஆம்-காதலன் காதலி இருவரும் கூடிய இன்பத்தின் இருக்கையே வீசும் அலையாகும், ஏமத்து ஈண்டு ஆம் அளிபரலே-அவ்வின்பத்தினின்று இங்கு உண்டாகும் அன்பே முத்தாகும், பரலில் தெற்றி தெறித்த ஒளி ஊடல் ஆம்- அம்முத்தினின்று தெளிந்து எழுகின்ற ஒளியே ஊடலாம், ஒளி பாய் கண்ணே சீர்த்து உகப்பாய் பெற்ற மகவு-அவ்வொளி பாய்கின்ற இடமே சிறந்து மகிழ்வுடன் பெற்ற குழவிகளாம்.

(க-து) காமம் கடலாகும்; புணர்ச்சியே அக்கடலிற்றோன்றும் அலையாம்; அன்பு அலையில் வந்த முத்து ஆம்; ஊடல் அம்முத்தின் ஒளியாகும்; மக்கள் அவ்வொளி கூடும் இடமாகும்.

(வி-ம்) காதலர் இருவர்க்கும் காமத்தின் அளவு குறைவு நிறைவின்றி என்றும் பெருகியிருப்பதாற் காமத்தைக் கடலென்றார்; அலைவருவது போலப் புணர்ச்சி மேன்மேலும் நிகழ்வதால் அதனை அலையென்றார்; காதலன் காதலியாகிய இருவரிடத்தும் புணர்ச்சி நிகழினும் ஒத்த அன்பு தோன்றுவது அருமையாதலால் அதனை முத்து என்றார். அன்புடையாரிடத்து மேலும் மேலும் ஊடல் நிகழ்வது அன்புப் பெருக்கத்திற்குக் காரணமாதலால் அவ்வூடலை முத்தின் ஒளி யென்றார். புணர்ச்சியால் மக்கட் பேறுண்டாதலால் அவ்வொளி பாயும் இடமே மக்கள் என்றார். எனவே காமம் தோன்றிக் காதலன் காதலியாய்ப் புணர்ந்து அன்பு அரும்பிப் பின்னர் ஊடலும் கூடலுமாய் வாழ்ந்து மக்கட்பேறு பெறும் இன்ப வாழ்வு இல்லறம் என விளக்கினர் எனக் கொள்க. வள்ளுவரும் "இன்பம் கடல் மற்று" என்றும், "காமக்கடல் மன்னும் உண்டே" என்றும் கூறியது காண்க. "அன்புற்றமர்ந்த