பக்கம் எண் :


52

வழக்கென்ப வையகத், தின்புற்றா ரெய்துஞ் சிறப்பு" என்பதும், புலத்தலிற்புத்தேணா டுண்டோ" என்பதும், "ஊடுதல் காமத்திற் கின்ப மதற்கின்பங் கூடி முயங்கப் பெறின்" என்பதும் "மங்கலமென்ப மனைமாட்சி மற்றதன்,நன்கலம் நன்மக்கட்பேறு" என்பதும், அன்பு, ஊடல், கூடல், மக்கட்பேறு இவற்றின் சிறப்பை எடுத்துரைப்பனவாம்.

(கு-பு) வீழ் இன்பம்.வினைத்தொகை. ஏமவிருக்கை: இருபெயரொட்டுப் பண்பு. தூவும் திரை என்பது உயிர் மெய் கெட்டுத் தூந்திரை என நின்றது "செய்யுமெனெச்ச வீற்றுயிர் மெய் சேறலும்" என்பது விதி. ஆம்பரல் என்பதும் அது. சீர்த்து+உற்று+உகப்பு+ஆய் என்பவை குற்றுகரங்கெட்டு நின்றன. பாய்கண்:வினைத்தொகை;ஏ:அசை.

28. கறங்குபறை காணா வுறுவூனைக் காதற்
பிறங்கறை நாவாரு மஃதே-திறமிரங்கி
யூடி யுணர்வாரே தாமிசைவார் பல்காலம்
ஈடில் தோரின்ப விருந்து.

(சொ-ள்) உறு ஊனை கறங்கு பறை காணா-பலியிடும்போது தன் பாலுற்ற ஊனினது சுவையை ஒலிக்கின்ற பறைகள் அறியா, காதல்பிறங்க அறை நாவாரும் அஃதே-காதலை விளங்கச் சொல்லுகின்ற நாவினையுடையவரும் அப்பறைகள் போலக் காதற் சுவையை யறியார்; திறம் இரங்கி ஊடி உணர்வாரே-(காதலிருவரும்) தன்மையறிந்து மனமிரங்கிப் புலந்து பின் அப்புலவி நீங்கிக் கூடியவரே, ஈடு இலது ஓர் இன்ப விருந்து பல்காலம் தாம் மிசைவர்-ஒப்பற்றதாகிய ஓர் இன்ப விருந்தினைப் பலகாலமும் தாம் நுகர்ந்து சுவையறிபவராவர்.

(க-து) காதற் சுவையைப் பலர்க்கும் விரித்துப் பேசுவார் எல்லாரும் காமச்சுவையையறியார். காதலர் இருவரும் இயல்பறிந்து பிரிவுக்கிரங்கிப் பின் ஊடியும் கூடியும் போகம் நுகர்ந்தவரே சுவையறிந்தவராவர்.

(வி-ம்) ஊன் என்பது இங்குப் பலியிடுங் குருதியையுணர்த்திச் சுவையைக் குறிப்பாகக் காட்டியது. ஊன்-தசை. அது ஆகுபெயராயிற்று.