பக்கம் எண் :


53

வெற்றிண்ட மன்னர்கள் தம் போர்ப்பறைகளை நீராட்டிக் குருதிப் பலியூட்டி யரசுகட்டிலேற்றி விழாக் கொண்டாடுவது மரபு. ஒலிக்கின்ற பறைக்கு அதன்மேல் பலியூட்டும்போது வழிந்த குருதியின் சுவை தெரியாது என்பார், "கறங்குபறை காணாவுறுவூனை" என்றார். குருதி தன் மேல் வழிந்தும் அதன் சுவையையறியாத பறையைப் போலச் சிலர் மங்கையரோடு கலந்திருந்தும் இன்பச் சுவையையறியார் என்ற கருத்தினால் "அஃதே" என்றார். காதலரிருவரும் கருத்தொருமித்து ஒருவரியல்பை மற்றொருவரறிந்து பிரிவுக்கிரங்கி இடனறிந்து ஊடி இனிதின் உணர்ந்து பின் கூடிக் காதற் சுவையறிந்தவர்க்கே அதன் சிறப்புத்தோன்றும் என்று கூறுவார் உணர்வாரே....தாமிசைவார் என்றார். இதனால் இன்பச் சிறப்புக் கூறப்பட்டது.

(கு-பு) கறங்கு பறை:வினைத்தொகை. உறுவூன் என்பதும் அது. பிறங்க அறை என்பது அகரந்தொக்குப் பிறங்கரை என நின்றது தொகுத்தல் விகாரம். அஃது+ஏ:தேற்றம். அறை நாவார்-வினைத்தொகை. நாவார்+உம்: உம்மை எச்சப் பொருளில் வந்தது. இன்பவிருந்து:இருபெயரொட்டு. உணர்வார்: வினையாலணையும் பெயர். அது எழுவாயாக நின்று மிசைவார் என்ற பயனிலை கொண்டது.

29. தோற்றாரே வெல்வர் துணைமிசைவார் கோட்டியானை
யேற்றுக் கழறொடியார் மிக்காரை யார்வரைவர்
போற்றளி கூடல் கரி.

(சொ-ள்) ஏற்றுயானைக் கோட்டு கழல் தொடியார்-ஆண்யானைத் தந்தத்தாற் செய்த வீரக்கழலும் வளையலும் அணிந்த ஆடவர் மகளிரில், மிக்காரை யார் வரைவர்-உயர்ந்தவர்களை யார் மணஞ்செய்துகொள்வர் (ஒப்பவரையே மணம்புரிவர்) , துணைமிசைவார்-(அவ்வாறு ஒத்த) வாழ்க்கைத் துணையாக அமைந்து காமவின்பம் நுகர்வாரில், தோற்றாரே வெல்வர்-ஊடலில் தோல்வியடைந்தவரே வென்றவராவர்; கரிபோற்று அளி கூடல்-அதற்குச் சான்று தோற்றவர் போற்றுவதும் தலையளி செய்வதும் ஆகிய செயல்களேயாம்.