"மனைத்தக்க மாண்புடைய ளாகித்தற் கொண்டான், வளத்தக்காள் வாழ்க்கைத் துணை" என்றும்," தற்காத்துத் தற்கொண்டாற் பேணித் தகைசான்ற, சொற்காத்துச் சோர்விலாள் பெண் என்றும் வள்ளுவர் கூறிய நற்பண்புகள் அமைந்துள்ளவள் என்பது தோன்ற "குற்றமொரூஉங் குணத்தள்" என்றார் குணங்களினீங்கிய பண்புகள் யாவும் குற்றமெனப்படும் என்றுணர்க: அறிவுடையோரைப் பேணின் அறிவு மிகவும் விளங்கும். ஆதலாற் பெண்களுக்கு அறிவுடையோரைப் பேணி நட்புக்கொள்ளுதல் நற்குணமாம். கொண்கன் குறிப்பறிந்து நாணுதலாவது அவன் மனத்துளெண்ணிய எண்ணத்தையறிந்து அதன்படி நாணியொழுகுதலாம். நாணம் என்பது இயற்கையாகப் பெண்கட்கு அமைந்த குணமாயினும் கணவன் குறிப்பறிந்து நாணத்தைக் கொள்வதும் நாணத்தை விடுவதுங் குற்றமல்ல என்பது தோன்ற, "குறிப்பறிந்து நாணுந் தகையள்" என்றார். "நறைமலர்க் குழலார் தமக்குமெய் யகலா நாணமே நலஞ்செய்பூ ணெனினும், நிறையுடைப் பெரும்பூணமளிவாய் நாண நிகழ்வுறா நிகழ்ச்சியே யன்றோ" எனப் பள்ளியிற் கணவன் குறிப்பறிந்து நாணத்தை விடுத்தலைப் பெரும் பூண் எனப் பேசுவதும் காண்க. இதனால் இல்லறத்திற்கு இப்பண்புடையவளே தக்கவள் என்று கூறினர். (கு-பு) உரிமையள்+ஆ. இதில் ஆ என்பது, ஆகி என்னும் வினையெச்சங் குறைந்து நின்றது. அவ்வினையெச்சம் பல அடுக்கி ஆம் என்னும் வினைமுற்றைக் கொண்டு முடிந்தது உரிமையள், இனியள் என்பனபோல வந்தவை வினையாலணையும் பெயர்கள். கற்ற+அறிஞர் : அகரம் தொகுத்தல். | 33. | மனைக்கொளி சேய் நாற்பணியோன் நாரப் புலக்கார் வினைக்கொளியாங் கட்கா மனலி-முனைக்கஞ்சா வீரரொளியா மடமே யரிவையர்க்காம் ஏரொளியா மில்லுடையான் றுப்பு. |
(சொ-ள்) மனைக்கு ஒளி சேய்-வீட்டிற்கு விளக்கு மக்கள் ஆவர், நாரம் புலக்கு ஆர் வினைக்கு ஒளி நாற்பணியோன்-நீர் பொருந்திய நிலத்திற்குச் செய்யும் தொழிலுக்கு விளக்கு நான்கு தொழிலும் அறிந்த
|