பக்கம் எண் :


6

இது பதினெட்டு நூல்களையும் காட்டுமாறு ஒரு புலவராற் பாடப்பட்டது எனத் தெரிகிறது. பாட வேறுபாடு பல. வேண்டிய வேறுபாடு ஒன்றை மட்டும் காட்டுகின்றேன். "இன்னிலைய காஞ்சியுடனேலாதி யென்பதூஉம், கைந்நிலையு மாங்கீழ்க் கணக்கு" என்பது இவ்வேறு பாட்டில் ஒன்று. முன்னது "இன்னிலை" ஒரு நூலாகக் காட்டுகின்றது. பின்னது "கைந்நிலை" ஒரு நூலாகக் காட்டுகின்றது. இன்னிலையை நூலாகக் கொண்டால் கைந்நிலை மறைந்து "ஒழுக்க நிலையனவாம்" கீழ்க்கணக்கு என அடை மொழியாகின்றது. கைந்நிலையை நூலாகக் கொண்டால் இன்னிலை மறைந்து "இனிய நிலைமையாகிய காஞ்சி என அடை மொழியாகின்றது. பதினெட்டாவது நூல் இன்னிலையா? கைந்நிலையா? என்ற ஐயம் எவர்க்கும் தோன்றுகின்றது. "இன்னிலை" உள்ளது என்று பலர் கூறினர். கைந்நிலை உள்ளது ஒன்று பலர் கூறினர். ஏட்டிலுள்ளது என முன்னர்க் கூறியவர்கட்கு எடுத்துக் காட்டுபவர் போல "இன்னிலை" என்ற நூலை திரு. வ. உ. சிதம்பரம் பிள்ளை அவர்கள் அச்சிற் பதித்தனர். "கைந்நிலை" என்ற நூலை ஆசிரியர் திரு. அனந்தராமையர் அவர்கள் பதித்தனர். அவற்றின் வரலாறு சிறிது காண்க.

இன்னிலை வரலாறு

"திரு. பொய்கையார் இன்னிலை. திரு வ. உ., சிதம்பரம் பிள்ளையவர்கள் விருத்தியுரையுடன் தில்லையாடி த. வேதியப் பிள்ளையால் பதிப்பிக்கப் பெற்றது. இரண்டாம் பதிப்பு. அம்பா சமுத்திரம் அகஸ்தியர் அச்சுக்கூடம் விபவ வருஷம்" என்று முன்பக்கம் எழுதப்பட்டுள்ளது. இப்புத்தகத்தில் "முன்னுரை" "ஆசிரியர்". "உரைப்பாயிரம்," "இரண்டாம்