ழவனேயாவன். கட்கு அனலி-விழிகளுக்கு விளக்காவது சூரியனேயாவன், முனைக்கு அஞ்சா வீரர் ஒளியாம்-போர் முனைக்கு அஞ்சாத படைவீரர்களே விளக்கு ஆவர், அரிவையர்க்கு மடமேஆம்-மங்கையருக்கு விளக்கு மடமை யென்னும் பண்பேயாகும், இல் உடையான் துப்பு ஒளி ஏர் ஆம்-இல்வாழ்வான் வலிமைக்கு விளக்கு ஏருழுதல் என்னுந் தொழிலாம். (க-து) மனைக்கு மக்களும், நிலத்திற்கு உழவனும், கண்ணுக்குக் கதிரவனும், போருக்கு வீரரும், பெண்ணுக்கு மடமையும், இல்வாழ்வானுக்குப் பயிர்த்தொழிலும் சிறப்பைத்தருவனவாம். (வி-ம்) "மைந்தன் மனைக்கு மணி" என்ற நீதி வெண்பாவின் அடியும், "கண்ணில் யாக்கையும் திங்களில் கங்குலும் கண் போல், அண்ணன் மந்திரி யில்லர சாட்சியு மருளில், திண்ணெ னெஞ்சமும் புலவரி லவையுமொண்டீம்பால், வண்ண வாயிள மக்களில் வாழ்வுமொப் பாமால்" என்ற சீகாளத்திப் புராணக் கவியும் மக்களின் சிறப்பை விளக்குவது காண்க. நாரம் - நீர், புலம்-நிலம். புலத்திற்கு எனச் சாரியை பெற்று வராது புலக்கு என நான்கனுருபு வந்தது. நீர் பொருந்திய நிலமாவன:வயல், தோட்டம் என்பன. எனவே சிறந்த விளைநிலம் என்பது குறிப்பு. ஆர் வினை-பொருந்திய தொழில்கள். உழவு, களையெடுத்தல், நீர்பாய்ச்சல் முதலிய தொழில்களை யுணர்த்திற்று. நாற்பணியோன் என்றது உழவனை. அவனுக்கு உழுதல், எருவிடுதல் களைகட்டல் நீர் பாய்ச்சல் ஆகிய நான்கு தொழிலும் சிறந்தனவாதல் பற்றி "நாற்பணியோன்" என்றார். வள்ளுவரும் "ஏரினும் நன்றா லெருவிடுதல் கட்டபின், நீரினும் நன்றதன் காப்பு" என்று கூறி இறுதியிற் காப்புத் தொழிலையும் உடன் சேர்த்தனர். காவல் உழவர்க்கே யுரிய சிறப்புத் தொழில் அன்று என்பது இவர் கருத்துப் போலும்; 'எண்ணுக்கு வரும் புவனம் யாவினுக்கும் கண்ணாவா னிவனே யன்றோ" எனவும், "மலர் தலை யுலகத்திருளெறிவிளக்கும், மன்னுயிர் விழிக்கக் கண்ணிய கண்ணும்"
|