எனவும் சூரியனைப் பிறபுலவர்களும் கண்ணாகக் கூறியிருப்பது நோக்குக. கதிரவனொளியில்லை யெனிற் கண்ணொளியாற் பயனின்றென்பது எவர்க்குந் தெரிந்ததே. வெற்றிபெற்ற வீரர் போரில் விளக்குப்போல் ஒளிர்தலின் முனைக்கு அவர் ஒளியென்றார். மடம் என்பது மகளிர் குணத்தின் முதன்மைக் குணம். அது கொளுத்தக்கொண்டு கொண்டதுவிடாமை என்பர். இல்வாழ்வார்க்குச் சிறந்த தொழில் பயிர்த்தொழில் என்பது யாவர்க்குந் தெரிந்ததே; உலகத்துள் உணவும் உடையும் அத்தொழிலால் வருவன எனின் அதன் உயர்வு கூறல் வேண்டுமோ? இல்லறச் சிறப்பு இதனாற் கூறப்பட்டது. (கு-பு) மனைக்கு, வினைக்கு, முனைக்கு, என்ற குற்றுகரங்கள் கெட்டுப் புணர்ந்தன. நான்கு+பணி = நாற்பணி, கண்+கு = கட்கு என்றாயிற்று, ஆகும்-ஆம் என நின்றது. | 34. | எய்ப்பில்வைப் பாக வருவாயி லைந்தொன்றை மெய்ப்பிணி சேய்வரைவிற் கூட்டிடுக-கைப்பொருள் இட்டிலுய் வாயிடுக்க வீங்க விழையற்க வாய் வட்டன் மனைக்கிழவன் மாண்பு. |
(சொ-ள்) கைப்பொருள் வாய் இட்டில் உய்வாய் இடுக்க கைப்பொருள் வருவாய் குறைந்தால் செலவுவழியையும் சுருக்குக, வீங்க விழையற்க- தன்னைப் பெருக்கிக் காட்ட விரும்பற்க வட்டல் மனைக்கிழவன் மாண்பு-பொருளைத் திரட்டுவதே மனைக்குரிய தலைவன் செயலாகும், வருவாயில் ஐந்துஒன்றை தனக்கு வரும் வருவாயில் ஐந்தில் ஒருபங்கை, எய்ப்பில் வைப்பாக-இளைத்த பருவத்தில் (கிழப்பருவத்தில்) நுகர்தற்குரிய சேமப்பொருளாகவும், மெய்ப்பிணி-உடற்பிணிக்கு வேண்டும் மருந்துண்டற்குரிய பொருளாகவும், சேய்வரைவில்-மக்கட்கு மணம் புரியும் செலவிற்குரிய பொருளாகவும், கூட்டிடுக-சேர்த்து வைத்திடுக. (க-து) வீட்டுக்குரிய தலைவன் பொருளைச் சேர்க்க வேண்டும்; வருவாய் குறைந்தாற் செலவைக் குறைக்கவேண்டும்; ஐந்தில் ஒரு பங்கைச் சேம நிதியாக வைத்திருக்க வேண்டும்; அப்பொருள் மக்கள் மணத்திற்கும் தன் முதுமைப்பருவத்திற்கும் நோய்க்கும் உதவியாகும்.
|