பக்கம் எண் :


62

(வி-ம்) வரவுக்குத்தக்கவாறு செலவு செய்யவேண்டும்; வரவிற்குக்குறைந்த செலவே தக்கதாம். வரவிற்கு மேற்செவவு செய்வது தகாததாம். 'ஆகா றளவிட்டி தாயினும் கேடில்லை, போகா றகலாக் கடை' என்பதும், "அளவறிந்து வாழாதான் வாழ்க்கை யுளபோல, இல்லாகித் தோன்றாக் கெடும்' என்பதும் ஈண்டுக் கருதத்தக்கன. ஆறில் ஒருபங்கு அரசனுக்கு இறையாகக் கொடுக்கப்படும் ஆதலால் ஐந்து பங்கில் ஒன்றை என்றார். ஆண்டுதோறும் ஐந்தில் ஒருபங்கைச் சேர்த்துச் சேமவைப்பாக வைத்திருந்தால் அது மக்கட்கு மண முடிக்கவும் நோய் வந்தால் மருந்துண்பதற்கும் முதுமைப்பருவத்தில் உதவியாகும் என்பது கருத்து. வீங்க-பெருக. இது தன்னைப் பிறர்க்குப் பெருக்கிக் காட்ட என்ற பொருளைத் தந்தது. வெளித்தோற்றம் பெருமையாகக்காட்டுவது, இதனை "ஆடம்பரம்" என்பர். அதனாற் பயனின்று என்பார், "விழையற்க" என்றார். வட்டல்-திரட்டுதல்; இது பொருளைத்திரட்டுதல் என்ற பொருளைத்தந்தது. "பொருளில்லார்க், கிவ்வுலக மில்லாதி யாங்கு" என்ற குறளடியை நினைவு கூர்க.

(கு-பு) மெய்ப்பிணி:ஏழனுருபும் பயனும் உடன்றொக்க தொகை. எய்ப்பு, வைப்பு என்பன தொழிற்பெயர்; ஆகுபெயரால் முதுமையையும் பொருளையும் உணர்த்தின. உய்வாய்-உய்க்கும் வாய் என வினைத்தொகையாயிற்று. இடுக்க : வியங்கோள், விழையற்க:எதிர்மறை வியங்கோள்,

35. ஐம்புலத்தோர் நல்குரவோ ரோம்பித் தலைப்பட்ட
செம்பாக நன்மனையைப் பேணிக்-கடாவுய்த்த
பைம்பு னிலைபேணி யூழ்ப்ப வடுவடார்
ஐம்புலமீர்த் தாரிற் றலை.

(சொ-ள்) ஐம்புலத்தோர் நல்குரவோர் ஓம்பி-தென்புலத்தார் முதலிய ஐந்து திறத்தாரையும் வறியவரையும் காத்து, தலைப்பட்ட செம்பாகம் நன் மனையைப் பேணி-தம்மைச்சார்ந்த ஒமுங்காகிய பங்கினால் நல்ல