என்பார் "இயைபு எனினும்....வேண்டல்" என்றார், போம்வாய-பொருள் செல்லும் இடத்தன, வாயஎன்னும் குறிப்பு வினை பெயராகி ஏழனுருபு தொக்கு நின்றதாகக் கொள்க. வேண்டல்:எதிர்மறைவியங்கோள். உடன் பாட்டிலும் இவ்வாறே நிற்கும். நள் என்பது விரும்பும் என்ற பொருளில் வந்தது. நள் என்பதை நடு எனப் பொருள் கொண்டு இடையாகிய அளவிற்கு மேற்பட்ட அளவுடைய தொழில் எனவும் கொள்ளலாம். தன் பொருளளவுக்கு நடுவாகிய முயற்சியைச் செய்ய முயலலாம்; அதற்கு மேற்பட்டதெனில் அம் முயற்சியை விட்டொழிப்பது நல்லது. ஓம்பல்:ஒழித்தல், நீக்குதல் என்று பொருளில் வந்தது. (கு-பு) ஆறு-என்பது ஈறு குறைந்து ஆ என நின்றது. செல்+தல்-சேறல். போகும் என்பது உயிர்மெய் கெட்டுப் போம் என நின்றது. மனைக்கிழவன்: நான்கனுருபுத் தொகை, தகுதிப் பொருளில் வந்தது. நள்ளளவு: வினைத்தொகை. நடு என்ற பொருளில் அது பண்புத் தொகை. கால்+தொழில்:பண்புத்தொகை. 37. | ஐங்குரவ ரோம்ப லினனீக்கல் சேர்ந்தோர்க்குப் பைங்கூழ் களைகணாப் பார்த்தளித்தல்-நையுளத்தர்க் குற்ற பரிவீர்த்த லெண்ணான் கறநெறியில் உற்ற புரிதல் கடன். |
(சொ-ள்) ஐங்குரவர் ஓம்பல்-ஐந்து குரவரையும் காத்தலும், இனல் நீக்கல்-அவர்கட்கு வருந்துன்பத்தை நீக்குவதும், சேர்ந்தோர்க்கு பைங்கூழ் களைகணா பார்த்து அளித்தல்-தன்னைச் சார்ந்தவர்க்கு நல்ல உணவினை ஆதரவாக ஆய்ந்து கொடுப்பதும், நை உளத்தார்க்கு உற்ற பரிவு ஈர்த்தல்-வருந்தும் நெஞ்சுடையார்க்கு நேர்ந்த துன்பத்தை நீக்குதலும், எண்ணான்கு அறம் நெறியில்-முப்பத்திரண்டாகிய தரும வழியில், உற்ற புரிதல் கடன்-தனக்கு இய்ற அறங்களைச் செய்வதும் (இல்வாழ்வானுக்குரிய) கடமையாம்.
|