எல்லாரும் இயற்ற இயலாது என்பது குறித்து "உற்ற புரிதல்" என்றார். மேற்கூறியவைகள் அனைத்துஞ் செய்ய வேண்டியவை என்றாராயிற்று. (கு-பு) ஐங்குரவர்:பண்புத்தொகை. ஓம்பல், நீக்கல், அளித்தல், ஈர்த்தல், புரிதல் இவை தொழிற் பெயர்கள். நையுளத்தர்:வினைத்தொகை. இன்னல்-இனல், உள்ளம்-உளம் எனக் குறைந்து நின்றது. தொகுத்தல் என்னும் செய்யுள் விகாரம்; இன்னல்-துன்பம். 38. | நல்லினஞ் சார னயனுணர்தல் பல்லாற்றான் நல்லின மோம்பல் பொறையாள-லொல்லும் வாய் இன்னார்க் கினிய புரித னெறிநிற்றல் நன்னாப்ப ணுய்ப்பதோ ராறு. |
(சொ-ள்) நல் இனம் சாரல்-நல்லோர் கூட்டத்தைச் சேர்வதும், நயன் உணர்தல்-நல்ல வழிகளையறிவதும், பல் ஆற்றான் நல் இனம் ஓம்பல் - பலவழிகளாலும் நல்லொழுக்கமுடையவர்களையே காத்தலும், பொறைஆளல்-பொறுமை என்னும் குணத்தைக்கொள்வதும், இன்னார்க்கு ஒல்லும் வாய் இனிய புரிதல்-பகைவர்க்கும் அமையம் வாய்த்தபோது நன்மையான செயல்களைச் செய்வதும், நெறி நிற்றல்-நல்லொழுக்க நெறியில் நின்று வாழ்வதும், நாப்பண் உய்ப்பது-நடு விடத்திற் சேர்ப்பதற்குரிய. ஓர் ஆறு-ஒரு வழியாம். (க-ரு) நல்லாரைச் சேர்வதும், நல்வழியை யறிவதும், நல்லவர்களைக் காப்பதும், பொறுமையை மனங்கொள்வதும், பகைவர்க்கும் நன்மை செய்வதும், நல்வழியினிற்பதும் ஆகிய செயல்கள் மேலுலகத்திற் சேர்க்கும். (வி-ம்) இனம்-கூட்டம். ஞானம் தோன்றுவதற்கு முதற் காரணம் நல்லோரைச் சேர்தலேயாம் ஆதலால் "நல்லினஞ் சாரலை" முன்வைத்தார். அதன் பின்னர் "நயன் உணர்தலை" வைத்தார்; அது அவருடன் சார்ந்த பின்பு தோன்றுவதால், உணவு, உடை, மனை நிலம், பொருள் இல்லாமை யாய்ந்து அவரவர்க்கு வேண்டுவன வளித்தலே காப்பாற்று முறையாதலால்
|