பக்கம் எண் :


71

பொய்ப்பாலைப் பிழைக்கும் வழியாகக் கொள்வதால் மெய்ப்பொருள் தோன்றாது மறையும் என்பதாயிற்று. போந்து என்ற செய்து என்னும் வாய்பாட்டைச் செயவென்னெச்சமாகக்கொண்டு போக அதனால் தேறார் எனப் பொருள் கொள்க. இதனால் அறம் பொருள் இன்பப்பற்றற்றவர்க்கே மெய்ப்பொருள் தோன்றும், என்று கூறினார்.

(கு-பு) மூன்று+பால்-முப்பால்:பண்புத்தொகை. செறும் பால்:பெயரெச்சத்தொடர். ஏழ்பிறப்பு:பண்புத்தொகை. தேறார் ஓரார் என்பன பலர்பாற்படர்க்கை எதிர் மறை வினைமுற்றுக்கள். வீழ்வார்:வினையாலணையும் பெயர்;இது எழுவாய்.

41. உண்மைமா லீர்த்து விருள்கடிந்து சாரையம் புண்விலங்கச் சார்பொருளைப் போற்றினோர்-நுண்ணுணர் அண்ணா நிலைப்படுவ ராற்றல் விழுப்புலனை
[வான் யெண்பொருட் கூரியலைச் சார்ந்து.

(சொ-ள்) உண்மை மால் ஈர்த்து-மெய்யாகத் தோன்றும் மயக்கத்தைக் கொடுத்து, இருள் கடிந்து-அஞ்ஞானத்தையும் நீக்கி, சார் ஐயம் புண்விலங்க-சார்ந்த ஐயமும் துன்பமும் விலக, சார்பொருளை போற்றினோர்-சார்தற்குரிய மெய்ப் பொருளை வணங்கியவர்கள், நுண் உணர்வான் ஆற்றல் விழுபுலனை ஒண்பொருட்கு ஊர் இயலைச்சார்ந்து-நுட்பமான அறிவினால் வலிய சிறந்த அறிவையும், ஒள்ளிய பரம்பொருட்குச் செலுத்துகின்ற தன்மையையும் சேர்ந்து, அண்ணாநிலை படுவர்-(ஒருவராலும்) அணுகமுடியாத நிலை (ஆகிய முத்தி) யையடைவர்.

(க-து) மயக்கத்தையும், அஞ்ஞானத்தையும் நீக்கிப் பரம் பொருளை வணங்கியவர் கூரிய அறிவால் நல்வழி சார்ந்து முத்தியடைவர்.

(வி-ம்) மால்-மயக்கம், தமக்குரிமையில்லாத பொருள்களையெல்லாம் தமக்குரியனவாக எண்ணி மயங்குதல், "வைத்த நிதி பெண்டிர் மக்கள் குலம் கல்வியென்னும் பித்தவுலகு" என்றார் மாணிக்கவாசகரும், பித்தம்-மயக்கம். பொருள்