பக்கம் எண் :


73

நீக்கித் துன்பத்தினை இனிய வழியாகக் கொள்வார், பிறப்பு இறப்பில் அடையும் நிலன் துன்னார்-பிறப்பிலும் இறப்பிலும் அவற்றிற்குரிய இடங்களிலும் சேரமாட்டார்.

(க-து) சிறந்த தவமுடையவர் முத்தியுலகத்தையே அறிந்து சேர்வார். துன்பத்தை இன்பத்திற்கு வழியாகக் கொள்வார். பிறப்பு இறப்பு இவற்றை நீக்குவர்.

(வி-ம்) ஒளி, களங்கமின்றி இருந்தால் நல்ல ஒளிவீசும், எப்போதும் ஒரு தன்மையாகவே இருக்கும். அதுபோலத் தவமும், காம முதலிய குற்றங்களை நீக்கியிருப்பின் அத்தவஞ்சிறந்தது ஆம் என்பார் "மாசகல...நோன்புடையோர்" என்றார். ஒளியைத் தவத்திற்கு ஒப்புரைத்தார். மூசுதல்-கெடுதல், சாதல், மூசா-கெடாத. இயற்கை நிலன் என்றது என்றும் அழியாதிருக்கும் இன்பவுலகத்தினை. உணர்வார் என்பது உணர்ந்து சேர்வார் என்பதைக் குறிப்பாலுணர்த்தியது. ஆசு-குற்றம்; இது தவமுடையார் செய்யத்தகாத காமம் வெகுளி, மயக்கம் என்ற முக்குற்றங்களையும் காட்டிற்று. "காமம் வெகுளி மயக்கம் இவைமூன்றன், நாமங் கெடக்கெடு நோய்" என்றார் வள்ளுவரும். காமம், பொருள்கள் மேல் செல்லும் விருப்பம்; வெகுளி அவ்விருப்பத்திற்கு இடையூறு நேர்ந்தபோது தோன்றும் சினம். மயக்கம், உரிமையற்ற பொருள்களை யுரிமையுடையனவென நினைத்து மயங்குதல். இவை மூன்றும் ஒழித்தவர் துன்பத்தினை யின்பமாகவே கொள்வார். இனிவாய்:இனியவாய் என்பதன் குறுக்கம். வாய்-வழி, இடம். துன்பம் என்பது பொருள் அழிவுகாரணமாகவே தோன்றுவது; பொருள் அழிவே தவமுனிவர்க்கு இன்பமாகும், "யாதனின் யாதனின் நீங்கியான் நோதல், அதனின் அதனின் இலன்" என்ற குறட் கருத்தை நோக்குக. பிறப்பிற்குரிய நிலம் மண்ணுலகம், விண்ணுலகம். இறப்புக்குரிய நிலம் எமனுலகம், இவ்விரண்டினையும் முத்தியுலகத்தையடைந்தவர் அடையார் என்று கொள்க.

(கு-பு) மாசு+அகல:குற்றியலுகரங் கெட்டது; ஆசு+அகற்றி என்பதும் அது. மூசா:ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம், உணர்வார்: