பக்கம் எண் :

ஊணுடை யெச்ச முயிர்க்கெல்லாம் வேறல்ல
நாணுடைமை மாந்தர் சிறப்பு.

 

ஊண் உடை எச்சம் உயிர்க்கு எல்லாம் வேறு அல்ல - உணவும் உடையும் அவை யொழிந்த பிறவும் மக்களுயிர்க் கெல்லாம் பொதுவாக வுரியனவாம்; நாண் உடைமை மாந்தர் சிறப்பு- ஆயின், நாணுடைமையோ நன்மக்கட்கே சிறப்பாக வுரியதாம்.

ஊணுடையொழிந்தன அணி மனை பேச்சு கல்வி முதலியன.'அச்சம் ' என்னும் பாடம் சரியானதன்று.