பக்கம் எண் :

பிறர்பழியுந் தம்பழியு நாணுவார் நாணுக்
குறைபதி யென்னு முலகு.

 

பிறர் பழியும் தம் பழியும் நாணுவார்- பிறர்க்கு வரும் பழியையும் தமக்கு வரும் பழியையும் ஒப்ப மதித்து அவ்விரண்டிற்கும் நாணுவாரை; உலகு நாணுக்கு உறைபதி என்னும் - உலகத்தார் நாணிற் குறைவிடமென்று சொல்வர்.

ஒப்ப மதித்தலாவது பிறர் பழியையும் தம் பழி போற் கருதுதல், 'உலகு' ஆகுபெயர்.