பக்கம் எண் :

குலஞ்சுடுங் கொள்கை பிழைப்பி னலஞ்சுடு
நாணின்மை நின்றக் கடை.

 

கொள்கை பிழைப்பின் குலம் சுடும் - ஒருவன் தன் கொள்கை தவறி யொழுகின் , அத்தவறு அவன் குடிப்பிறப்பை மட்டும் கெடுக்கும்; நாண் இன்மை நின்றக்கடை நலம் சுடும் - ஆயின் , ஒருவனிடத்து நாணின்மை நிலைத்து நின்றவிடத்தோ , அந்நிலைப்பு அவன் நலம் எல்லாவற்றையுங் கெடுத்துவிடும்.

கொள்கையாவது குடியுயர்வைப் பேணும் நெறிமுறை. 'நலம்.' வகுப்பொருமை . நலவகைகள்பிறப்பு, இயற்கையறிவு, கல்வி,பண்பு செயல் முதலியன.ஒழுக்கமின்மையினும் நாணின்மை மிகத் தீயது என்பதாம்.