பக்கம் எண் :

குடிசெய்வ லென்னு மொருவற்குத் தெய்வ
மடிதற்றுத் தான்முந் துறும்.

 

குடிசெய்வல் என்னும் ஒருவற்கு-என் குடியை மேன்மேலுயர்த்தக் கடவேன் என்னும் பூட்கைகொண்டு, அதற்கேற்ற முயற்சியைச் செய்யும் ஒருவனுக்கு; தெய்வம் மடி தற்றுத் தான் முந்து உறும்-உதவி செய்யும் பொருட்டுத் தெய்வமும் தன் ஆடையை வரிந்து கட்டிக்கொண்டு அவனுக்கு முன் வந்து நிற்கும்.

சொல்லுதல் செயலையுந் தழுவிற்று. தறுதல் இறுகவுடுத்தல். ஒன்றைத் தப்பாது செய்து முடிப்பதாக உள்ளத்திற் பூணுதல் பூட்கை. குடிசெய்தல் வினை இறைவனுக்கும் இசைந்ததென்பது கருத்து.