பக்கம் எண் :

சூழாமற் றானே முடிவெய்துந் தங்குடியைத்
தாழா துஞற்று பவர்க்கு.

 

தம் குடியைத் தாழாது உஞற்றுபவர்க்கு-தம் குடியை யுயர்த்துதற்கேற்ற வினையைத் தவக்கமின்றி முயல்வார்க்கு; சூழாமல்தானே முடிவு எய்தும் -அம்முயற்சி அதற்கேற்ற சூழ்வினை வேண்டாது தானாகவே வெற்றியாக முடியும்.

தெய்வத்துணை யிருத்தலால், விரைந்த முயற்சி மட்டுமிருப்பின் எளிதாய் முடியும் என்பதாம். ’குடி’ ஆகுபொருளது.