பக்கம் எண் :

குற்ற மிலனாய்க் குடிசெய்து வாழ்வானைச்
சுற்றமாச் சுற்று முலகு.

 

குற்றம் இலனாய்க் குடிசெய்து வாழ்வானை-ஒரு குற்றமுஞ் செய்யாது தன் குடியை யுயரச் செய்தொழுகுவானை; உலகு சுற்றமாச் சுற்றும்-அவன் குடியைச் சேர்ந்தார் அனைவரும், அவனுக்குச் சுற்றமாயிருத்தலை விரும்பித் தாமே சென்று அவனைச் சூழ்வர்.

குற்றங்கள் அறநயன் (நீதி) முறை (நியாயம்) நடுநிலைகட்கு மாறான செயல்கள். சுற்றம் உறவினராகச் சுற்றியிருக்கும் கூட்டம். உலகு’ வரையறுத்த ஆகுபெயர்.