பக்கம் எண் :

நல்லாண்மை யென்ப தொருவற்குத் தான்பிறந்த
வில்லாண்மை யாக்கிக் கொளல்.

 

ஒருவற்கு நல் ஆண்மை என்பது-ஒருவனுக்கு நல்ல ஆண்மையென்று சிறப்பித்துச் சொல்லப்படுவது; தான் பிறந்த இல் ஆண்மை ஆக்கிக் கொளல்-தான் பிறந்த குடியை ஆளுந் தன்மையைத் தனக்கு உண்டாக்கிக் கொள்ளுதல். குடியாளுந் தன்மையாவது குடியிலுள்ள வரை முன்னேற்றித் தன் வயப்படுத்துதல். பேராண்மையினின்று வேறுபடுத்தற்கு ’நல்லாண்மை’ யென்றார். இவ்விரு குறளாலும் குடிசெய்வாரின் தலைமை கூறப்பட்டது.